வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Modified: புதன், 9 ஏப்ரல் 2014 (17:00 IST)

ஐ ஆடியோ விழாவில் அர்னால்ட் ஸ்வாஸ்நெகர்...?

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் ஐ படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வாஸ்நெகர் கலந்து கொள்ளயிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ஐ படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இவர் ஒருகாலத்தில் ஜாக்கிசான் உள்பட பல வெளிநாட்டு நடிகர்களின் படங்களை தமிழகத்தில் விநியோகித்தவர். சென்னையில் ஜாக்கிசானின் படம் வெளியாகும் போது ரசிகர்களின் கொண்டாட்டங்களை வீடியோவில் பதிவு செய்து ஜாக்கிசானின் கவனத்துக்கு அப்போதே கொண்டு வந்தவர். அந்த பழக்கம் காரணமாக தசாவதாரம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்கு ஜாக்கிசானை ரவிச்சந்திரன் சென்னைக்கு அழைத்து வந்தார்.
 
ஐ படத்துக்கும் அதேபோல் ஒரு உலகளாவிய பிரபலத்தை அழைத்து வரவிருப்பதாக சில நாள்களாக பேசப்பட்டது. இந்நிலையில் அந்த பிரபலம் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வாஸ்நெகர் என தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆனால் இதுவரை இந்தத் தகவலை படம் சம்பந்தப்பட்டவர் உறுதி செய்யவில்லை.