வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: திங்கள், 19 மே 2014 (14:45 IST)

ஐயா... நமக்கொரு படம் எடுக்கணும்

பாரதி, பெரியார் படங்களை இயக்கிய ஞானராஜசேகரன் தற்போது கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறை எடுத்து வருகிறார். நம்மிடையே வாழ்ந்து மறைந்த ஆளுமைகளின் வாழ்க்கையை படமாக எடுக்கும் ஞானராஜசேகரன் எதிர்கொண்ட சில அனுபவங்கள் சுவாரஸியமானவை.
பாரதி, பெரியார் படங்களுக்குப் பிறகு சில சாதி சங்க நிர்வாகிகள் அவரை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். எங்கள் சாதித் தலைவரின் வாழ்க்கை வரலாறை நீங்க படமாக எடுக்கணும் என்றிருக்கிறார்கள். பணம் அவர்களுக்கு பிரச்சனையில்லை. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, தலைவரின் படத்தை எடுக்கணும் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர்.
 
சாதி கடந்த தலைவர்களைப் பற்றி படமெடுக்கலாம். சாதித் தலைவர்களைப் பற்றி படமெடுக்கலாமா? ஆனால் அதனை வெளிப்படையாக சொல்லும் அளவுக்கு ஆரோக்கியமாக தமிழக நிலைமை இல்லை. அதனால், உங்க தலைவரின் கதை எனக்குப் பிடித்திருந்தால் படமாக்கலாம் என்று நாசூக்காக அவர்களை தவிர்த்திருக்கிறார்.
 
தற்போது அவர் இயக்கி வரும் ராமானுஜன் உலகம் போற்றும் கணிதமேதையின் கதை. வெளிநாட்டவர் சிலரும் இந்தப் படத்தில் பங்களிப்பு செலுத்தியுள்ளனர். அதனால் பிற படங்கள் போலன்றி சர்வதேச அளவில் ராமானுஜன் கவனம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
 
கவனம் பெற வேண்டும் என்பதுதான் நமது ஆசையும்.