வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : செவ்வாய், 13 மே 2014 (19:07 IST)

ஐம்பெரும் இயக்குனர்களுடன் தனுஷ்

தனுஷ் இந்தியில் பால்கி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தனுஷுடன் இந்தப் படத்தில் நடிக்கும் இன்னொரு பிரபலம் கமல் - சரிதா தம்பதியின் இளைய மகள் அக்சரா.
பால்கி இயக்கிய சீனி கம், பா இரண்டிலும் ஹீரோ அமிதாப்பச்சன். இரண்டு படங்களுக்கும் இசை இளையராஜா, ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம். இன்னும் பெயரிடப்படாத மூன்றாவது படத்திலும் இந்த மூவரும் இருக்கிறார்கள். கூடுதலாக தனுஷ், அக்சரா.
 

இந்தப் படத்தில் வாய் பேசாத, காது கேளாத வேடமாம் தனுஷுக்கு. ஆச்சரியமான இன்னொரு விஷயம் இந்தி சினிமாவின் ஐந்து முன்னணி இயக்குனர்கள் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். ராஜ்குமார் ஹிரானி, ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா, அனுராக் பாசு, கரண் ஜோஹர் மற்றும் கௌரி ஷிண்டே. இதில் கௌரி ஷிண்டே பால்கியின் மனைவி, இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தை இயக்கியவர்.
இந்தியில் இரண்டாவது படத்தில் ஐந்து இயக்குனர்களுடன் நடிப்பது... தனுஷுக்கு வித்தியாசமான அனுபவம்தான்.