1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: வெள்ளி, 23 மே 2014 (15:57 IST)

ஊர் மக்களுக்காக ஒரு படம்

ஊரில் ஒரு திருவிழா என்றால், அந்த ஊரில் உள்ள பொது மக்களிடம் பணம் வசூ‌ல் செய்து பாட்டு கச்சேரி, ஆடல் பாடல் நிகழ்ச்சி, நாடகம் என்று போடுவார்கள். ஆனால், தூத்துக்குடி மாவட்ட வெம்பூர் கிராம இளைஞர்கள் சிலர், திருவிழா அன்று திரையிடுவதற்காக ஒரு திரைப்படத்தையே எடுத்து ஊர் மக்களுக்கு போட்டுக் காட்டியிருக்கிறார்கள். அந்த படத்தின் பெயர் அங்காளி பங்காளி. 
 
இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், படத்தில் பணியாற்றிய யாருமே சினிமா எடுப்பது பற்றிய எந்தவிதமான பயிற்சியும் இல்லாதவர்கள். நடிக, நடிகைகள் அனைவருமே வெம்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள்தான். 
 
படத்தை எடுத்து திருவிழா அன்று பொதுமக்களுக்கு போட்டுக் காட்ட, அனைவரும் வெகுவாக ரசித்தார்கள். தங்கள் முகத்தை அவ்வளவு பெரிய திரையில் பார்க்க மிகவும் மகிழ்ந்தார்கள். 
 
எங்களின் இந்தப் படத்தை அனைவரும் பார்த்து ரசிக்கும் விதமாக விரைவில் யூடியூப் பில் வெளியிட இருக்கிறோம் என்கிறார் இப்படத்துக்காக கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் விஜய்.