வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha priya
Last Updated : வியாழன், 22 மே 2014 (16:05 IST)

உலாவரும் ஆபாசப் படங்கள்

இண்டெர்நெட்டில் தற்போது ஸ்ருதிஹாசனின் ஆபாச படங்கள், அவருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. 
தெலுங்கில் தான் நடித்த ‘ஏவுடு’ என்ற படத்தால் வந்துதான் இத்தனை பிரச்சனைகளும். அதில் ஒரு பாடலுக்கு கொஞ்சம் கிளாமரான உடையில் நடனமாடியிருக்கிறார் ஸ்ருதி.

பின்னால், அதை போட்டுப் பார்க்க மிகவும் அதிர்ந்து போனவர். அந்த பாடலில் இடம் பெற்ற சில காட்சிகளை நீக்கும்படி தயாரிப்பாளரிடம் முறையிட்டிருக்கிறார்.  அவரும் ஒப்புக்கொண்டு உறுதியளித்ததோடு, ஒப்பந்த்த்திலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார். தற்போது அதை மீறும் விதமாக, அவர் குறிப்பிட்டு நீக்க சொன்ன அத்தனை படங்களும் தற்போது இண்டெர்நெட்டில் வந்து கொண்டிருக்கிறது. 
 
இது குறித்து ஆந்திர சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். தயாரிப்பு தரப்பில் எங்களுக்கு எதுவும் தெரியாது என்று சொல்லி கை விரிக்க, தற்போது அந்த பட்த்தில் வேலை பார்த்த ஸ்டில் போட்டோகிராபர்களிடம் விசாரித்து வருகிறது போலீஸ்.