வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Updated : திங்கள், 7 ஏப்ரல் 2014 (16:41 IST)

இளையராஜா இசை நிகழ்ச்சி... மனம் கசிந்த பாலா, பிரகாஷ்ராஜ்

தமுக்கம் மைதானத்தில் நடந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சி மதுரையை இசை வெள்ளத்தில் மூழ்கடித்தது. இவ்வளவு பிரமாண்ட ஜனத்திரளை ஒன்றுகூட்டும் சக்தி தமிழ் திரையுலகில் இசைஞானி இளையராஜாவின் இசைக்கு மட்டுமே உள்ளது.
 
இசை நிகழ்ச்சியின் ஒவ்வொரு துளியிலும் மகிழ்ச்சியும், பரவசமும் கரைபுரண்டோடியது. இடையிடையே இயக்குனர்கள் இளையராஜாவின் இசை மீதான தங்களின் பிணைப்பை உணர்ச்சி ததும்ப எடுத்துரைத்தனர்.
 
இயக்குனர் பாலா பேசுகையில், நான் அடுத்து பண்ணப் போகும் தாளம் தப்பட்டை (தாரை தப்பட்டை இல்லையா?) படத்துக்கு இளையராஜாதான் இசை. இது அவருக்கு ஆயிரமாவது படம். இந்தப் படத்தில் மதுரைக்காரன் சசிகுமார் நடிக்கிறார், மதுரைக்காரர் இசையமைக்கிறார், மதுரைக்காரனான நான் படத்தை டைரக்ட் செய்யறேன். இதைவிட என்ன பாக்கியம் வேண்டும் என்று மதுரைக்காரனாக பேசினார். 
 
 

தனது புதிய படம் உன் சமையல் அறையில் படத்தில் மதுரை மல்லிப்பூ, இட்லி ஆகியவற்றை வைத்து ஒரு பாடல் இளையராஜா போட்டிருப்பதாக பிரகாஷ்ராஜ் கூறினார்.

தனிமையில் அவரின் இசையை கேட்பேன் என்றவர், எனக்கு பொறுமையையும், வாழ்க்கையையும், இயல்பாக வாழும் முறையையும் கற்றுத் தந்தவர் இளையராஜா.

அதனால்தான் இன்று மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறேன். அதற்கு என் குடும்பத்தினர் சார்பில் நன்றி என்றார்.
 
நிகழ்ச்சியை நடிகை சுகாசினி தொகுத்து வழங்கினார். இளையராஜாவுடன் ஹரிகரன், சித்ரா, யுவன் உள்பட பல முன்னணி பாடகர்கள் நிகழ்ச்சியில் பாடினர். தமிழகத்தில் இப்படியொரு நிகழ்ச்சியை இளையராஜா நடத்தியிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.