வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 23 ஏப்ரல் 2014 (17:57 IST)

இரும்பு குதிரை தொலைக்காட்சி உரிமையை வாங்கிய சன்...?

பரதேசிக்குப் பிறகு அதர்வா நடித்து வரும் படங்களில் ஒன்று இரும்பு குதிரை. அதர்வாவுடன் ப்ரியா ஆனந்த், லட்சுமி ராயும் முக்கிய வேடமேற்றுள்ளனர். யுவராஜ் போஸ் இயக்கம்.
பைக் ரேஸை மையமாக வைத்து இரும்பு குதிரை தயாராகிறது. பைக் ரேஸராக அதர்வா வருகிறார். லட்சுமி ராய் இந்தப் படத்துக்காக பத்துக்கும் மேல் எடை குறைந்து ஸ்லிம்மாகியுள்ளார். அவரும் பைக் ரேஸராக நடிக்கிறார்.
 
மிகுந்த எதிர்ப்பார்ப்புக் குள்ளாகியிருக்கும் இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்க சன் தொலைக்காட்சி ஆர்வம் காட்டியதாகவும், பெரிய தொகைக்கு அவர்களே ஒளிபரப்பு உரிமையை வாங்கியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 
 
இரும்பு குதிரையை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்து வருகிறது.