1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: சனி, 10 மே 2014 (16:01 IST)

இன்னும் ஒரு காதல் படம்

எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதியது மட்டுமல்லாமல், படத்தை இயக்கியதோடு அதில் நாயகனாகவும் நடித்திருக்கிறார் அக்னி. 
 
படத்தின் பெயர் இது மனித காதல் அல்ல. காதலை முற்றிலும் மாறுபட்ட கதைக் களத்தில், நகைச்சுவையுடன் எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக கொச்சினை சேர்ந்த தருஷி நடிக்கிறார். இவர்களுடன் நாசர், மனோபாலா, தேவிகா, முத்துக்காளை, கிரேன் மனோகர் என ஏராளமான காமெடி நடிகர்கள் நடித்து வருகின்றனர். 
 
படத்தின் ஒளிப்பதிவை பாரதி கவணிக்க, ஷம்மீர் சுல்தான் இசையமைத்து வருகிறார். இப்படத்தை பிளாக் ஸி மூவிஸ் பட நிறுவனத்திற்காக கே. ஈஸ்வர மூர்த்தி, ஏ.வி. ஆறுமுகம் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர்.