இந்த கவர்ச்சிக்கெல்லாம் யு கிடைக்காது சார்

Ravivarma| Last Updated: சனி, 24 மே 2014 (12:45 IST)
பிரசன்னா, விமல், ரிச்சர்ட் மூன்று பேரும் இணைந்து ஒரு படம் நடித்திருக்கிறார்கள். இது எப்போ நடந்தது என்று நடுமண்டையை தட்ட வேண்டாம். இந்த முக்கூட்டணி இணைந்து சில வருடங்கள் ஆகிறது. படத்தின் பெயர் நேற்று இன்று. 
காட்டுக்குள் கையில்லாத பனியன் காஸ்ட்யூமில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் நாயகி அருந்ததி. படத்தில் கையில்லாத பனியன்தான் உங்க காஸ்ட்யூம் என்று கதை சொல்லும் முன்பே அருந்ததியை கன்வின்ஸ் செய்துள்ளார் இயக்குனர் பத்மாமகன். அப்படி ரொம்ப பிரயத்தனப்பட்டு எடுத்த படத்தை சென்சாருக்கு திரையிட்டு காட்ட, இந்த கவர்ச்சிக்கு யு வராது ஏ தான் கிடைக்கும் என்று கறாராக கூறிவிட்டார்கள். 
 


இதில் மேலும் படிக்கவும் :