வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Modified: சனி, 19 ஏப்ரல் 2014 (12:04 IST)

இந்திரஜித் படத்துக்காக காஷ்மீர் செல்லும் கௌதம் கார்த்திக்

கௌதம் கார்த்திக் நடித்துவரும் ஃபேண்டசி படம், இந்திரஜித். ராமாயணத்தில் வரும் ராவணனின் மகன் இந்திரஜித்தை மனதில் வைத்து இந்தப் பெயரை தேர்வு செய்துள்ளார் படத்தை இயக்கும் கலாபிரபு. இவர் தயாரிப்பாளர் தாணுவின் மகன், சக்கரக்கட்டி படத்தை இயக்கியவர்.
சென்னையில் தொடங்கிய இந்திரஜித்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த கோவளம், கோவா ஆகிய இடங்களில் தொடர்ந்து நடந்தது. அடுத்த மாதம் காஷ்மீரில் சில முக்கிய காட்சிகளை எடுக்க கலாபிரபு திட்டமிட்டுள்ளார். அதற்காக கௌதம் கார்த்திக் உள்ளிட்ட படயூனிட் காஷ்மீர் செல்லவுள்ளது.
ராமாயணத்தில் வரும் இந்திரஜித் மாயஜால வித்தைகளில் வல்லவர். கௌதம் கார்த்திக்கும் அதேபோன்ற திறமை வாய்த்தவராக இந்தப் படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.