வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : சனி, 24 மே 2014 (14:10 IST)

இந்தியில் பின்னடைவை சந்தித்த கோச்சடையான்

நேற்று கோச்சடையான் தமிழ், இந்தி உள்பட ஆறு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது. படத்துக்கு இருந்த எதிர்பார்ப்பும், புதிய தொழில்நுட்பம் என்ற விளம்பரமும் தென்னிந்தியாவில் படத்துக்கு மிகப்பெரிய ஓபனிங்கை பெற்றுத் தந்தது. ஆனால் கோச்சடையானின் இந்தி பதிப்பு எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
தமிழுக்கு அடுத்து கோச்சடையான் தரப்பினர் அதிகம் எதிர்பார்த்தது அதன் இந்திப் பதிப்பை. இந்திப் படவுலகின் மார்க்கெட் தமிழைவிட பல மடங்கு பெரியது. இந்திப் பதிப்பின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை மும்பையில் நடத்தினர். அமிதாப், சுபாஷ் கய் உள்ளிட்ட பெரும் தலைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரஜினியையும், சௌந்தர்யா அஸ்வினையும் பாராட்டினர்.
 

நேற்று கோச்சடையானின் இந்தி பதிப்பும் வெளியானது. அதனுடன் வெளியான இன்னொரு இந்திப் படம் ஹீரோ பன்டி. ஜாக்கி ஷெராஃபின் மகன் டைகர் ஷெராஃப் நடித்த இந்தப் படம் அறுபது சதவீத வசூலை பெற்றுள்ளது. 
அதேநேரம் ஹாலிவுட் திரைப்படமான எக்ஸ் மென் - டேய்ஸ் ஆஃப் பியூச்சர் பாஸ்ட் 70 சதவீத வசூலை பெற்று அசத்தியுள்ளது. இவையிரண்டுக்கும் அடுத்த இடத்தில்தான் கோச்சடையானின் இந்திப் பதிப்பின் வசூல் உள்ளது. சனி (இன்று), ஞாயிறில் வசூலின் சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.