1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: செவ்வாய், 6 மே 2014 (15:42 IST)

இந்தியில் படம் இயக்க தயாராகும் விஷ்ணுவர்தன்

நடிகைகளுக்கு இந்திப் படத்தில் நடிப்பது பெருங்கனவாக இருப்பது போல் சில இயக்குனர்களுக்கும் இந்தியில் படம் செய்வது வாழ்நாள் கனவு. கௌதம் அதனை சாதித்துவிட்டார். பிரபுதேவாவும், முருகதாஸும் அந்த கனவில் வெற்றிக் கொடியை பறக்கவிட்டுள்ளனர். செல்வராகவனுக்கும், விஷ்ணுவர்தனுக்கும் அது இன்னும் கனவாகவே உள்ளது.
 
ஆரம்பம் படம் மும்பையை களமாகக் கொண்டது என்பதால் அதன் இந்தி ரீமேக்கில் நடிக்க பல நடிகர்கள் ஆர்வம் காட்டினர். ஆரம்பம் எப்படியும் இந்தியில் ரீமேக்காகிவிடும் என்பது உறுதி. அந்த ரீமேக்கை நாமே இயக்கினால் என்ன என்ற ஆர்வத்தில் இருக்கிறார் விஷ்ணுவர்தன்.
 
தற்போது ஆர்யா, கிருஷ்ணா நடிக்கும் யட்சன் படத்தை இயக்கி வருகிறவர் இந்தியின் முன்னணி நட்சத்திரங்களுடன் பேச்சு நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. யட்சனுக்கு அடுத்து அவர் இயக்கப் போவது இந்திப் படமே என உறுதியாக கூறுகின்றனர். அது ஆரம்பம் படத்தின் ரீமேக்கா இல்லை புதிய ஸ்கிரிப்டா என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லை.