இந்திக்கு பறக்கும் ஈ

Webdunia|
FILE
தென்னகத்தை கலக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலியின் நான் ஈ - தெலுங்கில் ஈகா - அடுத்து இந்திக்கு செல்கிறது.

ராஜமௌலி இந்தப் படத்தை இந்தியில் டப் செய்யாமல் ‌ீமேக் செய்கிறார், 3டி-யில் படம் வெளியாகிறது என்று ஆளாளுக்கு கிளப்பிய கதைகளுக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளி. படம் டப்பிங் செய்யப்படுகிறது.

நான் ஈ படம் வெளியாகும் முன்பே படம் ஹிட்டாகும் என்று ஆருடம் சொன்னதோடு படத்தின் காசு வாங்காத பிஆர்ஓ வாக செயல்பட்டவர் ராம்கோபால் வர்மா. அதேபோல் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து, நல்ல கமர்ஷியல் படத்துக்கான தோற்றம் இருப்பதாக சிலாகித்தவர் அனுராக் காஷ்யப். இவர்களை‌க் கவர்ந்த படம் இந்தி ரசிகர்களை கவராதா என்ன.
இந்தியில் Makhi என்று பெயர் வைத்துள்ளனர். அக்டோபர் 12 படம் வெளியாகிறது.


இதில் மேலும் படிக்கவும் :