1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : திங்கள், 9 ஜூன் 2014 (19:13 IST)

இணையத்தில் வெளியான அஜீத் பட கதை - கலவரத்தில் கௌதம்...?

கௌதம் இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் படத்தின் கதை இதுதான் என இணையத்தில் ஒரு கதை உலவுகிறது. முதலில் அந்தக் கதை என்னவென்று பார்த்து விடுவோம்.
கௌதம் இயக்கும் இந்தப் படத்தில் அஜீத்துடன் அனுஷ்கா, த்ரிஷா நடிக்கின்றனர். த்ரிஷா குறித்த காட்சிகள் பிளாஷ்பேக்கில் சொல்லப்படுவதாக ஏற்கனவே செய்தி வெளியானது. இனி கதை. 
 
கடற்கரைச் சாலையில் காரில் செல்லும் த்ரிஷாவை ஒரு கும்பல் வழி மறிக்கிறது. என்ன ஏது என்று சுதாகரிப்பதற்குள் அவரை வெட்டி சாய்த்துவிட்டு தப்பியோடிவிடுகிறது அந்த மர்மக் கும்பல். த்ரிஷா ஏன் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தவர்கள் யார், என்ன காரணம்?
 

கொலையை அஜீத்தும், அனுஷ்காவும் இணைந்து துப்பறிகிறார்கள். அதில் த்ரிஷா குறித்த விஷயங்களை கண்டுபிடிக்கிறார்கள். அவர் கொலை செய்யப்பட்டதுக்கான காரணம் தெரிய வருகிறது. அதற்குப் பின்னால் சில பெரிய புள்ளிகள் இருப்பதையும் கண்டு பிடிக்கிறார்கள்.
இன்னும் பெயர் வைக்கப்படாத அஜீத் படத்தின் கதை இதுதான் என்று இணையத்தில் சைரன் அலறுகிறது. கௌதம் எடுத்துவரும் படத்தின் சாராம்சத்தை இந்தக் கதை கொண்டிருப்பதால் கௌதமின் யூனிட் கலவரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. எப்படி கதை கசிந்தது என்பது குறித்த விசாரணை நடப்பதாகவும் கூறுகிறார்கள்.
 
இவையெல்லாம் உறுதி செய்யப்படாத தகவல்கள். நாளையே, அது ஒரு டுபாக்கூர் கதை என்று கௌதம் சிரிக்கலாம். சிரித்தால் சேர்ந்து சிரிப்போம். 
 
ஒருவேளை அப்படியே உல்டாவானால்...?