ஆயுதம் செய்வோம் - சீரான ஓபனிங்!

Webdunia| Last Modified வெள்ளி, 4 ஜூலை 2008 (17:31 IST)
சுந்தர் சி-யின் ஆயுதம் செய்வோம் படமும் பழுதில்லாமல் ஓடும் என்கிறார்கள் விநியோகதஸ்தர்கள். தமிழகம் முழுவதும் தசாவதாரத்திற்கு அடுத்தபடி அதிக வசூல் ஆயுதம் செய்வோம் படத்திற்கே.

சென்னை பாக்ஸ் ஆஃபீஸை பொறுத்தவரை சென்றவார இறுதியில் 83,66,574 ரூபாய் வசூலித்து முதலிடத்தில் உள்ளது தசாவதாரம். 17வது நாள் இறுதி வரை சென்னையில் தசாவதாரத்தின் மொத்த வசூல் 4.88 கோடி ரூபாய்.

ஆயுதம் செய்வோம் முதல் மூன்று நாள் ஓபனிங்கில் சென்னையில் மட்டும் 9 லட்ச ரூபாய் வசூலித்துள்ளது. இதனுடன் வெளியான வல்லமை தாராயோ, அய்யாவழி மற்றும் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் குருவி, சந்தோஷ் சுப்ரமணியம் படங்களைவிட இது அதிகம்.
இதே வசூல் இன்னும் சில வாரங்கள் நீடித்தால் சுந்தர் சி-யின் வெற்றிப்பட வரிசையில் ஆயுதம் செய்வோம் இடம்பெற்றுவிடும்.


இதில் மேலும் படிக்கவும் :