ஆகஸ்டில் அதிரடியை தொடங்குகிறது வேந்தர் டிவி

Webdunia|
FILE
எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்களின் ஸ்தாபகர் பாரி வேந்தரின் இன்னொரு வியாபார கிளைதான் தலைமுறை பத்திரிகையும், தலைமுறை தொலைக்காட்சியும். இன்று என்ற தினசரியை தொடங்கும் முயற்சியும் நடந்து வருகிறது.

சினிமா தயாரிப்பில், விநியோகத்தில் இறங்காமல் ஒரு தொலைக்காட்சியை வெற்றிகரமாக நடத்துவது சிரமத்துக்குரிய விஷயம். அதனை மனதில் வைத்து தொடங்கப்பட்டதுதான் வேந்தர் மூவிஸ். படங்கள் விநியோகம், தயாரிப்பு என சுறுசுறுப்பு காட்டும் இந்த நிறுவனத்தை நிர்வகிக்கும் மதன் பாரி வேந்தரின் மகன். அடுத்த மாதம் வேந்தர் டிவி யை பரிசோதனை முயற்சியாக ஒளிபரப்புகிறார்கள்.
வேந்தர் டிவி க்கான கட்டிடத்தை பிரான்ஸை சேர்ந்த வல்லுனர்கள் வடிவமைத்து, அவர்கள் மேற்பார்வையில் கட்டிடப் பணிகள் நடக்கின்றன. சமீபத்தில் எஸ்ஆர்எம் நிறுவனங்களில் நடந்த ஐடி ரெய்டுக்கு இந்த கட்டிடமும் முக்கிய காரணம்.

வேந்தர் டிவி யின் வரவால் மற்ற சேனல்கள் தங்களை அலர்ட் செய்துள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :