அ‌ஜித்தை வளைத்த சன்

FILE

ஆட்சி மாறும் போதெல்லாம் படங்களின் தொலைக்காட்சி உ‌ரிமையை வாங்கும் காட்சிகளும் மாறும். திமுக ஆட்சியில் முன்னணி படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உ‌ரிமையை வளைத்து வளைத்து வாங்கிப் போடும் சன் தொலைக்காட்சி அதிமுக ஆட்சியில் அடக்கி வாசிக்கும். ஜெயா தலைதூக்கும். இந்தமுறை அதிமுக ஆட்சி அமைத்த போதும் அப்படியேதான் நடந்தது. ஆனால் எவ்வளவு நாளைக்கு தள்ளியே இருப்பது? களத்தில் குதித்திருக்கிறது சன் தொலைக்காட்சி.

மற்ற சேனல்களைவிட அதிக தொகைக்கு படங்களை வளைத்துப் போடுகிறவர்கள் தங்களின் பணாஸ்திரத்தை பயன்படுத்தி வீழ்த்திய இரண்டு படங்கள் ‌ஜில்லா, வீரம். இதில் வீரத்தை ஜெயா தொலைக்காட்சி வாங்கிவிட்டதாகதான் கூறியிருந்தனர் (நாமும்கூட அப்படிதான் செய்தி வெளியிட்டிருந்தோம்). இந்நிலையில் வீரத்தை அதிக பணம் தந்து சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.

Webdunia|
முன்னணி நடிகர்களின் படங்களை யார் வாங்குவது என்ற போட்டியில் மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியிருக்கிறது சன் தொலைக்காட்சி.
இந்த இரு படங்களின் தொலைக்காட்சி உ‌ரிமையை வாங்கியருப்பதன் வழியாக 2014 ல் மற்ற சேனல்களைவிட பல மைல்தூரம் முன்னேறி பறக்கிறது சன்.


இதில் மேலும் படிக்கவும் :