வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Updated : வெள்ளி, 30 மே 2014 (14:28 IST)

அவரோடதுதான் பெஸ்ட் பாடி - தமன்னா புளங்காகிதம்

இந்தி திரைத்துறையில் லைட்பாயும் சிக்ஸ்பேக்குடன்தான் அலைகிறார்கள். நடிகர்கள் பற்றி சொல்லத் தேவையில்லை. சட்டையை கழற்றி சிக்ஸ்பேக் சகிதம் போஸ் தந்த பிறகே படத்தில் கையெழுத்து இடுகிறார்களாம். சிக்ஸ்பேக்தான் சினிமாவில் நுழைவதற்கான சிகினேச்சர்.
பாலிவுட் முழுக்க சிக்ஸ்பேக் பாடிகள் நிறைந்திருந்தாலும் ஹிர்த்திக்கின் சிக்ஸ்பேக்குக்கு ரசிகைகள் அதிகம். சிறுத்த இடையும், சிறகுபோல் விரிந்த மார்பும் சூசனையை தவிர மற்ற அனைத்துப் பெண்களுக்கும் பிடிக்கும். தமன்னாவுக்கும் அது பிடித்ததில் ஆச்சரியமில்லை.

ஹிம்மத்வாலா தோல்விக்குப் பின் அதே சஜித் கானின் இயக்கத்தில் ஹம்சகல்ஸ் படத்தில் நடித்து வருகிறார் தமன்னா. பிபாசா பாசு, இஷா குப்தா போன்ற பிரபலங்கள் இருந்தாலும் தமன்னாவுக்கே அதிக முக்கியத்துவம் தந்துள்ளார் சஜித் கான். அதனால் சீனியர் நடிகை பிபாசா பாசுக்கு கோபம். இத்தனைக்கும் இந்த இரு சக நடிகைகளும் பிகினியில் பொளந்து கட்டியிருக்கிறார்கள். வேறு நடிகையாக இருந்தால் போட்டிக்கு தானுமொரு பிகினியை மாட்டியிருப்பார். ஆனால் தமன்னா பிகினியை சீண்டவில்லை.
எனக்கென்று ஒரு லிமிட் இருக்கிறது. அதை தாண்ட மாட்டேன். கண்டிப்பாக எப்போதும் பிகினியில் நடிக்க மாட்டேன் என்றிருக்கிறார் உறுதியாக. சமீபத்தில் பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில் நோ பிகினி என்பதை உறுதி செய்தவர், பாலிவுட்டில் யாருக்கு சிறந்த பாடி என்ற கேள்விக்கு ஹிர்த்திக் ரோஷனை பரிந்துரைத்தார்.
 
என்னதான் சிறந்த சிக்ஸ்பேக் பாடியாக இருந்தாலும் ஹிர்த்திக் ரோஷனால் இப்போது அரை மணிநேரம் தொடர்ந்து ஒரே இருக்கையில் உட்கார முடியாமல் அவஸ்தைப்படுகிறார். காரணம் கடுமையான முதுகுவலி. ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு போவதாக இருந்தாலும் அரை மணிநேரத்துக்கு ஒரு தடவை காரை மாற்றியாக வேண்டும். 
 
அருமையான பாடியாக இருந்தாலும் அசுரத்தனமான வலி இருந்தால் என்ன செய்ய முடியும்?