Widgets Magazine

அறிவழகன் படத்தில் அதுல் குல்கர்னி

Webdunia| Last Modified சனி, 12 மே 2012 (15:46 IST)
கமல்ஹாசனின் ஹேராமில்தான் முதல் முதலில் நடித்தார் அதுல் குல்கர்னி. அடுத்து லிங்குசாமியின் ரன், தனுஷின் பொல்லாதவன். என்றாலும் ஹேராம் அளவுக்கு இந்த அற்புத நடிகனை மற்றவர்கள் பயன்படுத்தவில்லை. அந்தக் குறையை அறிவழகன் போக்குவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

ஈரம் படத்தை எடுத்த அறிவழகன் அடுத்து வல்லினம் என்ற படத்தை ஆஸ்கர் ஃபிலிம்ஸுக்காக எடுத்து வருகிறார். நகுல் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படம் ஒரு விளையாட்டு வீரனைப் பற்றியது. இதில் நடிக்க அதுல் குல்கர்னியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அறிவழகன் முதல் படத்திலேயே கவனிக்க வைத்தவர். இவரது இயக்கத்தில் அதுல் குல்கர்னியின் நடிப்பு அபாரமாக இருக்கும் என்ற நம்பிக்கை அனைவ‌ரிடமும் உள்ளது.
இந்தப் படத்தில் பிந்து மாதவி ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டு திடீரென நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :