வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: சனி, 21 ஜூன் 2014 (12:38 IST)

அரிமா நம்பிக்கு யு சான்றிதழ்

விக்ரம் பிரபு நடிப்பில் அடுத்து வெளிவரும் படம் அரிமா நம்பி. இந்தப் படத்துக்கு தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
துப்பாக்கி படத்தை தாணு தயாரித்த போது அவரது கவனத்தை கவர்ந்தவர் ஆனந்த் சங்கர். முருகதாஸின் உதவி இயக்குனர். அவரது சுறுசுறுப்பையும் திறமையையும் பார்த்தவர் தந்த வாய்ப்புதான் இந்த அரிமா நம்பி. 
 
விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் நடித்திருக்கும் இது ஒரு முழுநீள ஆக்ஷன் படம். ட்ரம்ஸ் சிவமணி இசையமைத்துள்ளார். அவர் ஒரு திரைப்படத்துக்கு இசையமைப்பது இதுவே முதல்முறை.
 
விரைவில் படம் வெளியாகவிருக்கும் நிலையில் படத்தை தணிக்கைக்குழுவுக்கு திரையிட்டு காட்டினர். படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் அளித்துள்ளனர்.