வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: திங்கள், 19 மே 2014 (12:35 IST)

அதை மட்டும் மாத்த முடியாது

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி ஹீரோவாக ரீஎன்ட்ரியாகும் படம் 49 ஓ. அதில் விவசாயியாக கவுண்டர் நடித்துள்ளார். படத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அரசியல்பூர்வமாக அலசப்பட்டுள்ளது.
யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் தேர்வு செய்யும் 49  ஓ -வை படத்தின் பெயராக வைத்துள்ளனர். ஆனால் தற்போது 49 ஓ மாற்றப்பட்டு நோட்டோவை அறிமுகப்படுத்தியுள்ளனர். வழக்கில் இல்லாத 49 ஓ -வை மாற்றி நோட்டோ என புதுப்பெயர் வைக்கப்படுமா என்பது பல நாள்களாக கேட்கப்பட்டு வரும் கேள்வி. அதற்கு படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் எல்.சிவபாலன் பதிலளித்துள்ளார்.
எந்த சூழலிலும் படத்தின் பெயரை மட்டும் மாற்றப் போவதில்லை என்பதுதான் அவரது பதில். 
 
ஞாநி போன்றவர்களால் 49 ஓ என்பது தமிழர்கள் அனைவருக்கும் பரிட்சயமாகிவிட்டது. அதேபோல் படத்தின் பெயர் 49 ஓ என்பதும் ரசிகர்கள் மனதில் ஆழப்பதிந்துவிட்டது. பெயரை மாற்றினால் அது படத்துக்கே மைனஸாகிவிட வாய்ப்புள்ளது.
 
49 ஓ -வை ஆரோக்கியதாஸ் இயக்கியுள்ளார்.