அடுத்த மாதம் வெளியாகும் வேலையில்லா பட்டதாரி

Geetha Priya| Last Modified வியாழன், 12 ஜூன் 2014 (11:37 IST)
தனுஷ் தயாரித்து நடிக்கும் வேலையில்லா பட்டதாரி ஜுலையில் திரைக்கு வருகிறது. வேல்ராஜ் படத்தை இயக்கியுள்ளார்.
நடிகனாகவும், பாடகராகவும், பாடலாசிரியராகவும் இருந்த தனுஷ் வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எதிர்நீச்சல் படத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் மாறினார். அவரது அடுத்த தயாரிப்பு வேலையில்லா பட்டதாரி. எதிர்நீச்சல் படத்தை போலன்றி இதில் தனுஷே நடித்துள்ளார்.
 
பொல்லாதவன், ஆடுகளம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வேல்ராஜ் இந்தப் படத்தை இயக்கி இயக்குனராகவும் முத்திரை பதித்துள்ளார். தனுஷ் ஜோ‌டியாக நடிப்பது அமலா பால். இசை அனிருத்.
 
படம் இயக்க வேண்டும் என்ற தனது நெடுநாளைய ஆசையின் அடுத்தகட்டத்தை வேலையில்லா பட்டதாரியில் எட்டியிருக்கிறார் தனுஷ். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மட்டுமின்றி காட்சிகள் அமைப்பதிலும் தனது அழுத்தமான பங்களிப்பை செலுத்தியிருக்கிறார். இயக்கம் தனுஷ் என்று சொல்லுமளவுக்கு ஈடுபாடு காட்டியிருப்பதாக படயூனிட் தெரிவிக்கிறது.
 
இந்த மாதம் படத்தின் பாடல்கள், ட்ரெய்லரை வெளியிட்டு அடுத்த மாதம் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்தத் தகவலை அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :