வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: வெள்ளி, 2 மே 2014 (16:00 IST)

அஞ்சான் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்கிய சன்

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் அஞ்சான் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸும், யுடிவி யும் இணைந்து அஞ்சானை தயாரித்தன. இதில் சூர்யாவுக்கு இரண்டு வேடங்கள் என கூறப்படுகிறது. மும்பையை களமாகக் கொண்ட படம் என்பதால் பெரும்பகுதி படப்பிடிப்பு மும்பையில் நடத்தப்பட்டது. யுவன் இசையமைக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு.
 
இந்த வருடத்தின் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றான அஞ்சான் ஆகஸ்ட் 15 சுதந்திரதினத்தில் வெளியாகிறது. இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்க கடும் போட்டி நிலவியது. கடைசியில் பெரும் தொகைக்கு ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.
 
சூர்யாவின் அயன், சிங்கம், சிங்கம் 2 படங்களின் உரிமையையும் சன் தொலைக்காட்சியே வாங்கியது குறிப்பிடத்தக்கது.