வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : செவ்வாய், 17 ஜூன் 2014 (15:01 IST)

அஜீத், விஜய் மோதப்போவதில்லை

அஜீத் தற்போது கௌதம் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். விஜய் முருகதாஸின் கத்தி படத்தில். கத்தி முடிவடையும் நிலையில் இருந்தாலும் அக்டோபர் 23 தீபாவளி அன்றே படத்தை வெளியிட முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் உள்ளனர். கௌதம் தனது படத்தை செப்டம்பரில் எப்படியும் முடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறார். இப்போது இயல்பாக எழும் கேள்வி,
தீபாவளிக்கு அஜீத், விஜய் படங்கள் மோதுமா?
 
மோதும் என்றும் மோதாது என்றும் கோடம்பாக்கம் குடுமிப்பிடி சண்டையை ஆரம்பித்திருக்கும் நேரத்தில் முக்கியமான விளக்கம் ஒன்றை தந்து சர்ச்சையை சைலண்டாக்கியுள்ளார் கௌதம். 
 

அஜீத் படத்தை செப்டம்பரில் முடிக்க பிளான் செய்திருக்கிறோம். ஆனால் படம் வெளியாவது முருகதாஸின் கத்திக்குப் பிறகுதான் என்று தெ‌ளிவாக விளக்கமளித்துள்ளார். 
இரு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் மோதும் போது இரண்டு படங்களின் வசூலும் பாதிக்கப்படும். கௌதமின் இந்த முடிவு புத்திசாலித்தனமானது. 
 
அதேநேரம் ஹரி இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துவரும் பூஜை படம் தீபாவளிக்கு வெளியாகும் என்பதில் எந்த மாற்றமும் இல்லையாம். ஆக, கத்தி, பூஜை மோதல் உறுதியாகியிருக்கிறது.