வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Muthukumar
Last Updated : சனி, 19 ஏப்ரல் 2014 (19:15 IST)

அஜீத் - கௌதம் படத்தில் விவேக்

அஜீத் நடிப்பில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கும் படத்தில் விவேக் நடிக்கிறார். இந்தத் தகவலை உறுதி செய்த விவேக் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் கூறினார்.
 
அஜீத் - கௌதம் இணையும் படத்தின் படப்பிடிப்பு சில தினங்கள் முன்பு தொடங்கியது. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்துக்கு ஸ்ரீதர் ராகவன் திரைக்கதை அமைக்க ஹாரிஸ் இசையமைக்கிறார். மின்னலே படத்தில் அறிமுகமான கௌதம், ஹாரிஸ் இருவரும் நடுவில் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக இணைந்து பணியாற்றாமல் இருந்தனர். இந்தப் படம் நண்பர்கள் இருவரையும் மீண்டும் ஒன்றிணைத்துள்ளது.
 
மின்னலேயில் விவேக் நடித்திருந்தார். அந்தப் படத்துக்குப் பிறகு கௌதமின் எந்தப் படத்திலும் அவருக்கேற்ற வேடம் அமையவில்லை. அஜீத் நடிக்கும் படத்தில் கௌதம் விவேக்குக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்.
 
இதன் இரண்டாவதுகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்கிறது. அதில் விவேக் கலந்து கொள்கிறார்.