வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 9 ஏப்ரல் 2014 (10:41 IST)

அஜீத்தின் படத்தில் அருண் விஜய், ஆதி...?

இன்னும் ஒருநாள்தான். இந்த கேள்விக்குறி எதுவுமில்லாமல் எழுதலாம். நாளை அஜீத் - கௌதம் படத்தின் பூஜை. ஏ.எம்.ரத்னத்தின் ஸ்ரீ சாய்பாபா கோவிலில் எளிமையாக நடத்தப்படும் என தெரிகிறது.
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் வில்லன்களாக அருண் விஜய், அரவிந்த்சாமி நடிக்கிறார்கள் என்று எழுதி, அரவிந்த்சாமி அதனை நான்சென்ஸ் என்று மறுத்தது நினைவிருக்கலாம். சமீபத்திய செய்தி, மிருகம் ஆதி இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கூடவே அருண் விஜய்.
 
ஸ்ரீதர் ராகவன் திரைக்கதை அமைக்க, ஹாரிஸ் இசையமைக்கும் இப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி ஹீரோயின். ரத்னத்தின் ஸ்ரீ சத்ய சாய் நிறுவனம் தயாரிப்பு. நமக்குக் கிடைத்த தகவல்படி அருண் விஜய், ஆதி இருவரும் படத்தில் நடிப்பது இறுதி செய்யப்பட்டுவிட்டது. இன்றைய பூஜையின் போது படம் குறித்த அதிக விவரங்கள் தெரிய வரலாம்.