Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மஞ்ச‌ள் வெயில் - இறுதி அறிவிப்பு

Webdunia| Last Modified வெள்ளி, 29 மே 2009 (16:10 IST)
வசீகரன் இயக்கத்தில் தயாரான மஞ்சள் வெயில் எப்போதோ வெளியாகியிருக்க வேண்டும். அரை டஜன் வெளியீட்டு தேதிகளை ஏமாற்றி இன்னும் பெட்டிக்குள்தான் இருக்கிறது படம்.

இறுதியாக மேலுமொரு ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள் மஞ்சள் வெயில் தயாரிப்பாளர்கள். ஜூன் 12 பிரளயமே நடந்தாலும் படம் திரைக்கு வந்துவிடுமாம்.

சந்தியா, பிரசன்னா, பாலா நடித்திருக்கும் இந்தப் படத்தை சாண்ட்ரா மீடியா வெளியிடுகிறது. எல்லாம் அவன் செயல், அழகர் மலை படங்களின் ஹீரோ ஆர்கே இதில் வில்லனாக நடித்திருக்கிறார். கல்லூரி மாணவராக ஆக்சன் அவதாரம் எடுத்திருக்கிறார் பிரசன்னா.
பன்னிரெண்டாம் தேதி மஞ்சள் வெயில் திரைக்கு வரும் என்று தயாரிப்பாளருடன் சேர்ந்து நாமும் நம்புவோம்.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :