Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

திரைப்பட நல வாரியம்

Webdunia| Last Modified சனி, 28 டிசம்பர் 2013 (18:02 IST)
திரைப்படத் துறையினருக்கான நலவாரியக் கூட்டம் அவ்வப்போது நடைபெறும். அது போல இந்த ஆண்டிற்கான மூன்றாவது கூட்டம் சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர் திரைப்பட நகரில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் போது நலவாரிய உறுப்பினர்கள் 302 பேருக்கு சுமார் பத்து லட்ச ரூபாய்க்கும் அதிகமான நல உதவிகள் வழங்கப்பட்டது. இவ்வுதவிகளை செய்தி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கி உரையாற்றினார்.

மேலும், நலவாரிய உறுப்பினர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அதை படித்து, பரிசீலித்து சாத்தியமானவற்றை செய்து தருவதாக அமைச்சர் உறுதியளித்தார். இக்கூட்டத்தில் இயக்குனர் பி.வாசு, ஆர்.வி.உதயகுமார், நடிகர் ராமராஜன், டி.கே.கலா,எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதில் மேலும் படிக்கவும் :