Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சின்னத்திரை டூ சினிமா

Webdunia|
FILE
சின்னத்திரையில் மிமிக்ரி நிகழ்ச்சி மூலமாக அறிமுகமானவர் ஆதவன். அதை தொடர்ந்து கொ‌ஞ்ச‌ம் நடி‌ங்க பா‌ஸ் ‌நிக‌ழ்‌ச்‌சி மூல‌ம் ‌பிரபலமானவ‌ர், நிகழ்ச்சி தொகுப்பாளராவும், சில படங்களுக்கு உதவி இயக்குனராகவும் இருந்து வந்த இவர், தற்போது ஓடிக் கொண்டிருக்கும் பிரியாணி படத்தில் காமெடி காட்சிகளில் நடித்தார்.

இயக்குனராக வர வேண்டும் என்று சென்னைக்கு வந்த என்னை பல்வேறு திசையில் பயணித்து தற்போது நடிகனாகி இருக்கிறேன். பிரியாணியை தொடர்ந்து நம்பியார், அதையடுத்து இருக்கு ஆனா இல்லை, சிகரம் தொடு ஆகிய படங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து வருகிறேன்.

எல்லா டெக்னீசியன்களுக்குள்ளும் இயக்குனராகும் கனவு இருந்து கொண்டுதான் இருக்கும் எனக்கும் அப்படித்தான். நல்ல வாய்ப்பு வரும்போது படங்களை இயக்குவேன். அதுவரை தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பேன் என்கிறார் ஆதவன்.


இதில் மேலும் படிக்கவும் :