ஸ்வைன்ஃப்ளூ தடுப்பூசி மருந்து பாதுகாப்பானதா?

pig
Webdunia|
webdunia photo
WD
உலகை உலுக்கும் ஏ (எச்1 என்1) வைரஸ் என்று அழைக்கப்படும் ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் தாக்குதலை தடுக்க கிளாக்சோ ஸ்மித்க்ளைன் மருந்து உற்பத்தி நிறுவனம் 'பேன்டம்ரிக்ஸ்' (Pandemrix) என்ற தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து தயாரித்து வருகிறது. இதில் சேர்க்கப்பட்டுள்ள துணை மருந்து பொருள் குறித்து தற்போது உலகெங்கிலும் மருத்துவ நிபுணர்களிடையே சர்ச்சை கிளம்பியுள்ளது.

பொதுவாகவே தடுப்பூசி மருந்துகளில் மனித உடலில் அதன் வினைத்திறனை அதிகரிக்கும் வண்ணமும், உடல் அதனை ஏற்றுக் கொண்டு வினையாற்றவும் துணை மருந்துப் பொருள் சேர்ப்பது வழக்கம்தான். ஆனால் தற்போது இந்த ஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசி மருந்தில் சேர்க்கப்பட்டுள்ள 'ஸ்க்வாலீன்' (Squalene) என்ற துணைப்பொருளே இந்தச் சர்ச்சைக்குக் காரணம்.
ஜெர்மனி அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள மருந்து ஆய்வு அமைப்பில் பணியாற்றும் டாக்டர் லுத்விக் இந்த ஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசி மருந்து குறித்து கடுமையான விமர்சனங்களை எழுப்பி, அதனை மருத்துவர்கள் பயன்படுத்தவேண்டாம், இதில் பிரச்சாரம்தான் அதிகமுள்ளது, பிரச்சாரத்திற்கு நியாயம் கற்பிக்கும் விஞ்ஞான சாட்சியங்கள் சரிவர நிரூபிக்கப்படாதது என்று அதிர்ச்சியூட்டியுள்ளார்.
நேச்சுரல் நியூஸ் இணையத் தள ஆசிரியர் மைக் ஆடம்ஸ் இது குறித்து 10 கேள்விகளை தன் இணையத் தளத்தில் எழுப்பி அதற்கு விமர்சன ரீதியான விடைகளையும் அளித்துள்ளார்.

அவர் அந்த கேள்விகளுக்கு முன் குறிப்பிடுகையில், எந்த ஒரு தடுப்பு மருந்தும், அதன் வினைத்திறன் பற்றிய கட்டுக்கதைகளுடன்தான் வெளிவருகிறது. அதாவது எந்த ஒரு தடுப்பு மருந்தும் சிறப்பாகவே செயல்படும், அதன் வினைத்திறன் பற்றி ஒருவரும் கேள்வி எழுப்பக்கூடாது, அப்படி கேள்வி எழுப்பினால் அந்த விஞ்ஞானியை விஞ்ஞான சமூகம் ஒதுக்கிவிடும் அல்லது அவரை பொதுச் சுகாதாரத்திற்கு எதிரி என்று முத்திரை குத்தும் என்று சாடியுள்ளார்.
அதாவது மருத்துவர்களும், சுகாதார அதிகாரிகளும் எப்போதும் விடை தர மறுக்கும் ஒரு 10 கேள்விகளை அவர் எழுப்புகிறார்:

1. ஃப்ளூவால் பாதிக்கப்படாத ஆங்காங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் மீது நடத்தப்படும் 'ப்ளேசிபோ-கட்டுப்பாட்டு ஆய்வுகள் எங்கே? அதாவது ஃப்ளூ தடுப்பு மருந்துகள் செயல்திறன் மிக்கவை என்ற ஆய்வுகள் எங்கே?
விடை: இல்லை.

2. ஃப்ளூ தடுப்பு மருந்துகள் வேலை செய்யும் என்பதற்கான "விஞ்ஞான" ஆய்வுகள் எங்கே?

விடை: குழு அளவில் செய்யும் பரிசோதனை முறை, அதாவது 'கோஹார்ட் ஸ்டடீஸ்' தவிர வேறு இல்லை. இந்த ஆவுகளை நம்ப முடியாது. ஃப்ளூ தடுப்பு மருந்துகள் வேலை செய்யும் என்பதற்கான நேர்மையான எந்த ஒரு சாட்சியமும் இல்லை.
3. ஃப்ளூ தடுப்பு மருந்தில் சேர்க்கப்படும் துணைப்பொருளான திமிரோசால் மனித உடலுக்கு ஏற்றதுதானா? ஏனெனில் மெதில் மெர்குரி என்று அழைக்கப்படும் இது பாதரசமாகும். பாதரசம் என்பது தீவிரமான நச்சு கனரக உலோகம் என்று கூறப்படும்போது, அதன் பாதுகாப்பு நம்பகத் தன்மையுடையதா?

விடை: இது பாதுகாப்பானது அல்ல. மேலும் தளர்வுறச்செய்யும் நரம்பு நோய்கள் ஏன் தோன்றுகின்றன என்பதையும் இது விளக்குகிறது.
4. தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்ட பின்பு குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் நாளடைவில் நரம்புத் தளர்ச்சியும், மூளை வீக்கமும், வலிப்பும், சில வேளைகளில் மரணமும் ஏற்படுவதாக ஏன் செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன?இதில் மேலும் படிக்கவும் :