வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அ‌றிவோ‌ம்
Written By sugapriya
Last Updated : புதன், 13 ஜூலை 2016 (12:45 IST)

ஹைடெக் பச்சை குத்துதல் மூலமாக உணர்ச்சிகளை கண்காணிக்க முடியும்

'மின்னணு பச்சை குத்துதல்' வாயிலாக தசை மற்றும் நரம்பு செல்கள் செயல்பாடுகளை அளவிட முடியும் என டெல் அவிவ் பல்கலைக்கழகம் ஆராய்ந்து கூறியுள்ளது.




தற்போது பச்சை குத்துதல் இளம் வயதில் உள்ள மக்கள் மத்தியில் ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இதை அறிந்து டெல் அவிவ் பல்கலைக்கழகம் ’மின்னணு பச்சை குத்துதல்' என்பதன் மூலமாக தசை மற்றும் நரம்பு செல்கள் செயல்பாடுகளை அளவிட முடியும் என்று ஆராய்ச்சி மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளது.

இந்த மின்னணு பச்சை குத்துதல் ஒரு கார்பன் மின்முனையின் மூலம் மனித தோலை இணைகிறது. பின்னர் இதில் இருக்கும் பாலிமர் மற்றும் நானோ தொழில்நுட்பம் மேற்பரப்பில் உள்ள மின்முனையை மேம்படுத்தும்.

இது தோல் எரிச்சல் இல்லாமல் வலுவான , நிலையான சிக்னல்களை நீண்ட மணி நேரம் பதிவு செய்யும் திறனை உடையது.புதிய மின்வாயின் ஒரு முக்கிய பயன்பாடு என்னவென்றால் மின்சார சிக்னல்கள் மூலம் முக பாவனைகளை கண்காணித்து, மேப்பிங் முக தசைகளின் உணர்ச்சிகளை பெற முடியும்.

இந்த கண்டுபிடிப்பை  மருந்துவம், புனர்வாழ்வு  மற்றும் வணிக சந்தைகளிலும் பயன்படுத்த முடியும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்