வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அ‌றிவோ‌ம்
Written By சுரேஷ் வெங்கடாசலம்
Last Updated : புதன், 3 பிப்ரவரி 2016 (14:11 IST)

உள்ளங்களை கொள்ளை கொண்ட அண்ணாவின் மேடைப் பேச்சு

தமிழர் உள்ளங்களைக் கொள்ளை கொண்டது அண்ணாவின் மேடைப் பேச்சு. மேடைப் பேச்சுகுப் பேர்போனவர் அண்ணா.


 

 
அறிஞர் அண்ணா என்று அழைக்கப்படம் சி.என்.அண்ணாதுறையின் பேச்சைக் கேட்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்களாம்.
 
அண்ணாவின் கூட்டம் எந்த ஊரில் நடைபெற்றாலும் அந்த ஊர் அன்று திருவிழாக் கோலம் பூண்டு விடும் என்னும் அளவிற்கு அவரது மேடை பேச்சுகள் இருக்குமாம்.
 
எவ்வளவு நேரம் கிடைத்தாலும் அதை மக்கள் விரும்பும் படியாகவும் கைத்தட்டல் நிறைந்ததாகவும் அமைப்பது அண்ணாவின் தனித்திறன்களுள் ஒன்று.
 
ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட அண்ணா 5 வினாடிகள் மட்டுமே பேசினார். ஆந்த பேச்சு அவரது பேச்சாற்றலை பறை சாற்றுவதாக அமைந்தது.
 
அந்த பேச்சு "மாதமோ சித்திரை ... நேரமோ பத்தரை ... உங்களுக்கோ நித்திரை ... போடுங்கள் உதய சூரியனுக்கு முத்திரை" என்று கூறி தனது உரைறை நிறைவு செய்தார்.
 
கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் அந்த பேச்சைக் கேட்டு பலத்த கரவொலி எழுப்பினர்.
 
ஒரு முறை அமெரிக்காவில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது, அண்ணாவின் ஆங்கில அறிவைச் சோதிக்க, "Because" என்ற இணைப்புச் சொல்லை மூன்று முறை பயன்படுத்தி ஆங்கில வார்த்தை ஒன்று அமைக்குமாறு கேட்டார்களாம், அதற்கு அண்ணா "Because is a Conjuction because, because is not a word" என்று பதிலளித்துப் பேசியதாகவும் இதைத் கேட்டு அவர்கள் வியப்பில் ஆழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இதேபோல, பல மணி நேர பேச்சானாலும் சுவாரஸ்ணமாக பேசும் ஆற்றலைக் கொண்டவர் அண்ணா. தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் சுவாரஸ்யமாகவும், தொடர்ச்சியாகவும் பேசக்கூடிய ஆற்றல் பெற்றவர் அண்ணா.
 
மேடைப் பேச்சு குறித்து அண்ணா கூறுகையில், "பேசும் பொருள் பயன்படத் தக்கதாகவும் வீணான வம்புக்கு வித்திடாத வகையிலும் அமைத்துக் கொள்வது நல்லது.
 
இனிதே ஆகவேண்டும் என்று முயன்றால், சதங்கையும் ஜாலரும் தேடித் தீரவேண்டி வரும்.
 
இனிமையுங்கூட, கொள்கையின் உறுதியிலே இருந்து பிறப்பதுதான். கொள்கையை விட்டுக் கொடுப்பதால் வாராது" என்று கூறியுள்ளார்.
 
அண்ணாவின் நினைவுநாள் பிப்ரவரி 3.