வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அ‌றிவோ‌ம்
Written By Ashok
Last Modified: புதன், 20 ஜனவரி 2016 (17:44 IST)

விண்ணில் அதிசய நிகழ்வு: அதிகாலையில் பார்க்கலாம்

விண்ணில் ஐந்து கோள்கள் ஒரே நேர்கோட்டில் இருக்கும் அரிய நிகழ்வை அதிகாலை நேரத்தில் இன்று முதல் ஒரு மாதம் வரை வெறும் கண்ணால் பார்க்கலாம் என்று வானியலாளர்கள் தெரிவித்தனர்.


 
 
இந்த ஆண்டில் சூரிய குடும்பத்தில் உள்ள 9 கோள்களில் ஐந்து கோள்கள் ஒரே நேர்கோட்டில் வளைவான அமைப்பில் அடுத்தடுத்து வரிசையாக தென்பட இருக்கிறது. இந்த நிகழ்வு 11 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடைபெறும் என்றும் இந்த நிகழ்வு கடைசியாக கடந்த 2005 ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ளது என்றும் வானியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 
 
பூமியின் தென் திசை நோக்கி வானத்தை பார்க்கும்போது, சூரிய குடும்பத்தில் உள்ள புதன் (Mercury), வெள்ளி (Venus) , சனி (Saturn) , செவ்வாய் (Mars)  , வியாழன் (Jupiter)  ஆகிய கோள்கள் வளைவான அமைப்பில் காணப்படும்.
 
இன்று முதல் வரும் பிப்ரவரி 20ந்தேதி வரை அதிகாலை வேளையில் வானில் தென்படும் இந்த காட்சியை பொதுமக்கள் வெறும் கண்ணால் பார்க்கலாம் வானியலாளர்கள் கூறியுள்ளனர்.