Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அருகில் வந்த ஆமை

சங்கர் 

வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (15:37 IST)

Widgets Magazine

அருகாமை என்ற சொல்லை அண்மை, மிக அருகில் என்ற பொருள்களில் பல இடங்களிலும் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். ஒரு வேர்ச் சொல்லுடன் 'ஆமை' என்ற விகுதி சேர்ந்தால் வழக்கமாக எதிர்மறைப் பொருளைக் குறிக்கும்.காட்டு:

பணிவு + ஆமை = பணியாமை
கனிவு + ஆமை = கனியாமை
செய் + ஆமை = செய்யாமை

அதே நெறியில் பார்த்தால்

அருகு + ஆமை = அருகாமை

என்பது நெருங்கியிராமை என்றல்லவா பொருள் தர வேண்டும். ஆனால்  online lexicon
இல் கூட  proximity என்றே அருகாமைக்குப் பொருள் சொல்கிறது. இது புழக்கத்தில் வந்துவிட்டதால் தந்த மரியாதையா? அல்லது
இந்தச் சொல்லுக்குமட்டும் ஏதேனும் விதிவிலக்கா


தமிழண்ணலின் ஒரு கட்டுரை:

அருகில் புகுந்த ஆமை

எங்கள் வீட்டிற்கு அருகில், சிவன் கோயிலுக்கு அருகில் என்று கூற வேண்டிய இடங்களில் அருகாமையில் என்று எழுதுகிறார்கள். செந்தமிழாக எழுதுகிற
நினைப்பு; எங்கிருந்து இந்த ஆமை 'அருகில்' வந்ததென்று தெரியவில்லை. கல்லாமை, அழுக்காறாமை, வெஃகாமை, விளங்காமை போன்ற எதிர்மறைத்

தொழிற் பெயர்கள் பலவுள. அருகாமையில் எதிர்மறை எதுவுமில்லை. அருகுதல்- சுருங்குதல்; அருகாமை - சுருங்காமை என்றால் அத் தொழிற்பெயர் வேறு. இனிமேல் நம் அருகில் இந்த 'ஆமை' வராமல் காக்க வேண்டும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

'கூட்டம் இப்படிதான் நடத்தப்பட வேண்டும்' - போட்டி போட்ட மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் தி.மு.கவினர் சட்டப்பேரவை ...

news

பிராய்லர் கோழி உடல் நலத்திற்கு நல்லதாம்: அமைச்சர் விளக்கம்

பிராய்லர் கோழியால் உடல் நலத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கால்நடைத்துறை அமைச்சர் ...

news

டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியாவின் நண்பர் மாளவியா திடீர் கைது

கோகுல்ராஜ் கொலை வழக்கில் மரணமடைந்த டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியாவின் நண்பர் மாளவியா திடீர் கைது ...

news

பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

ஆக்கிரமிப்பு காஷ்மீரை வீட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டுமென்று இந்தியா எச்சரித்துள்ளது

Widgets Magazine Widgets Magazine