Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நிலவு தோன்றியது எப்படி?? வானியல் ஆராய்ச்சியாளர்கள் பதில்

புதன், 28 செப்டம்பர் 2016 (12:20 IST)

Widgets Magazine

பூமி தோன்றிய புதிதில் செவ்வாய் கிரகத்தின் அளவு கொண்ட ஒரு பொருள் பூமியின் மீது மோதியதில் நிலவு உருவானதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 
பூமி 450 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய போது, தியா(Theia) என்னும் செவ்வாய் கிரகத்தின் அளவுள்ள ஒன்று பூமியின் மீது பயங்கரமாக மோதியது என்றும், அப்போது சிதறிய பொருட்கள் விண்வெளியில் ஒன்றிணைந்து நிலவாக உருவானது என்றும் விஞ்ஞானிகள் சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்தனர். ஆனால் அதற்கான ஆதாரம் கிடைக்காமல் இருந்தது.
 
இந்நிலையில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் நிலவுக்கு சென்றபோது அங்கிருந்து தோண்டி எடுத்து வந்த பாறை படிமங்களையும், பூமியின் தரைமட்டத்துக்கு கீழே 2,900 கி.மீ ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்ட படிமங்களையும் வானியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து பார்த்தனர். இதில் பூமியில் இருக்கும் இரும்பு, பிராணவாயு போன்ற கலவைகள், நிலவின் பாறைகளிலும் இருப்பது தெரியவந்தது.
 
இதைத் தொடர்ந்து வேறு ஒரு கிரகத்தின் மோதலால் சிதறிய பொருட்களில் இருந்து நிலவு தோன்றியது என தெரிவித்துள்ளனர். அதே சமயம் மோதல் நிகழ்வினால் தான் நிலவு உருவானதற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

எலி கடித்து விட்டது : அமைச்சரிடம் நடிகை புகார்

ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, தன்னுடைய கைப்பையை எலி ஒன்று கடித்து குதறிவிட்டது ...

news

ஜெயலலிதாவை பார்க்க சூலாயுதத்துடன் நுழைய முயன்ற பெண்: அப்பல்லோவில் பரபரப்பு!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ...

news

இந்தியாவால் தனிமையான பாகிஸ்தான்: வங்காளதேசம் உள்ளிட்ட மூன்று நாடுகள் புறக்கணிப்பு

உரி தாக்குதலை அடுத்து இந்தியா சார்க் மாநாட்டை புறக்கணிக்கப்போவதாக அறிவித்ததை தொடர்ந்து ...

news

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடகா : தமிழகத்திற்கு தண்ணீர் தர மீண்டும் மறுப்பு (வீடியோ)

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடகம் மீண்டும் மறுத்துள்ளது.

Widgets Magazine Widgets Magazine