1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Geetha Priya
Last Updated : வியாழன், 11 செப்டம்பர் 2014 (13:34 IST)

சந்தோஷ் நாராயணன் ஒரு நடிகனுக்கு கிடைச்ச மிகப்பெரிய கிப்ட் - சித்தார்த்

கன்னட லூசியா படத்தின் ரீமேக் எனக்குள் ஒருவனில் நடித்து முடித்திருக்கிறார் சித்தார்த். ஜிகிர்தண்டாவுக்குப் பிறகு அதைவிட வெரைட்டியான வேடம் சித்தார்த்துக்கு இந்தப் படத்தில். படம் குறித்த அவரது உரையாடல் உங்களுக்காக.
எனக்குள் ஒருவன் பற்றி சொல்லுங்க?
 
எனக்குள் ஒருவன்ங்கிறது ஒரு புயூட்டிஃபுல்லான கனவு. இந்த கனவை நானோ, பிரசாத்தோ, சி.வி.யோ பார்க்கிறதுக்கு முன்னாடி கன்னடத்தில் ஒரு போல்டான ஃபிலிம் மேக்கர் இந்தக் கனவை பார்த்தார். பவன் குமார்ங்கிற ஃபிலிம் மேக்கர். லூசியா என்கிற அவரோட படத்தின் மூலக்கதைதான் எனக்குள் ஒருவன்.
 

லூசியா படத்துக்கு பலர் தயாரிப்பாளர் என்று கேள்விப்பட்டோம்...?
 
பத்தாயிரம் பேரை கன்வின்ஸ் பண்ணி அவங்ககிட்டயிருந்து டொனேஷன் வாங்கி இந்தப் படத்தை பவன் குமார் எடுத்தார். அதுவொரு அமேசிங் அச்சீவ்மெண்ட். 
எனக்குள் ஒருவன் புரொடியூசர் சி.வி.குமார் பற்றி சொல்லுங்க?
 
சி.வி.குமார் ஒரு அக்ரசீவான புரொடியூசர். நல்ல கன்டெண்ட் எங்கிருக்கோ அதை மோப்பம் பிடிச்சி எங்கிருந்தாலும் பிடிச்சிடுவார். 
 
இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது?
 
லூசியாவை நான் கன்னடத்துல பார்த்ததுக்கு அப்புறம் உடனே அந்தப் படத்தோட ரைட்ஸை என்னுடைய கம்பெனிக்காக வாங்கணும்னு போன் பண்ணியிருந்தேன். பெங்களூருக்கு போன் பண்ணி கேட்டா, சி.வி.குமார் முந்திட்டார்னு சொன்னாங்க. ஸோ, வேற வழியில்லாம சி.வி.குமார் சாருக்கு போன் செய்து, சார் நீங்க ரைட்ஸை வாங்கிட்டீங்க. நடிக்க சான்ஸ் கொடுங்கன்னு பேசினேன். 
இது அப்பட்டமான ரீமேக்கா இல்லை இதில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறதா?
 
சிம்பிளா பவன் குமார் படத்தோட ரீமேக்குன்னு சொல்லிட முடியாது. ஆமா, பவன் குமார் அந்தப் படம் எடுக்கலைன்னா இந்தப் படம் இருந்திருக்காது. பட், அந்தப் படத்தை பார்க்காமல், அதன் கன்டெண்டை மட்டும் கேட்டு அதன் ரைட்ஸை சி.வி.குமார் வாங்கியிருக்கார். அதுவொரு அமேசிங் ஜட்ஜ்மெண்ட். பிரசாத் அந்தக் கதையை புரிஞ்சுகிட்டு டீடெய்லா புதுப்படம் மாதிரியே சி.வி.குமார்கிட்ட சொன்னார். இந்த பியூட்டிஃபுல்லான கான்செப்டை பிரசாத் அவரோட ஸ்டைல்ல சொல்லியிருக்கார். பவன் குமார்கிட்டயும் அதைதான் சொன்னேன். கண்டிப்பா இது உங்க லூசியாவை பார்க்கிற மாதிரி இருக்காது, வேற மாதிரிதான் இருக்கும். 
 

தொடர்ந்து உங்க இரண்டு படங்களுக்கு சந்தோஷ் நாராயணன்தான் இசை...?
 
ஏ.ஆர்.ரஹ்மானே சந்தோஷ் நாராயணன் பத்தி சொல்லியிருக்கார். சந்தோஷ் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கான். அவரோட பாட்டு கேட்க ரொம்ப நல்லாயிருக்குன்னு என்கிட்டயே சொல்லியிருக்கார். இசைப்புயல் பாராட்டுறது சாதாரண விஷயம் கிடையாது. அவர் நாலு வார்த்தைதான் பேசுவார். அந்த நாலு வார்த்தைக்குள்ள ஒரு பாராட்டையும் சேர்க்கிறதுங்கிறது பெரிய விஷயம். சந்தோஷ் ஒரு நடிகனுக்கு கிடைச்ச மிகப்பெரிய கிப்ட்.
இந்தப் படத்தின் விசேஷம்...?
 
இதுல நான் இதுவரை பண்ணாத பல விஷயங்கள் பண்ணியிருக்கேன். இது என்னோட முதல் டபுள் ரோல். ஒரு நடிகனா சுயநலத்தில் மட்டும் சொல்லலை. இந்தப் படத்தில் நடிச்ச எல்லோருக்குமே டபுள் ரோல்தான்.
 
இதில் பாடியிருக்கிறீர்களாமே?
 
ஆமா, ஒரு பாட்டு பாடியிருக்கேன். ஒரு ப்ளேபேக் சிங்கரா இது என்னுடைய பதினைந்தாவது பாடல். அந்தப் பாட்டை எட்டு மாசமா கேட்டுட்டிருந்தேன். அதை நான் பாடணும்னு சந்தோஷ் கேட்டப்போ முடியாதுன்னு சொன்னேன். பாட்டு நல்லாயிருக்கு. அதை ஏன் கெடுக்குறீங்கன்னு ஆர்கியூ பண்ணினேன். பட், என் மூஞ்சிக்கு அந்த பாட்டு செட்டாகும்னு அவர் நினைச்சிருப்பார் போலிருக்கு.