வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By ஜே,பி,ஆர்
Last Updated : வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (15:34 IST)

கதைக்கு ஏற்ப சிந்தித்து நடிக்கிறேன் - சமந்தா பேட்டி

ஒரே நேரத்தில் விக்ரம், விஜய், தனுஷ், சூர்யா என்று முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து வருகிறார் சமந்தா.


 

 
தமிழைப் பொறுத்தவரை அவர்தான் நம்பர் ஒன். ஆனால், எண் வித்தையில் எப்போதும் அவருக்கு நம்பிக்கையில்லை. ஆனால், அவர் பயப்படும் விஷயம்  ஒன்று உள்ளது. அதனை சமந்தாவே சொல்கிறார்.
 
10 எண்றதுக்குள்ள முடிய ஏன் இவ்வளவு காலதாமதம்?
 
தாமதம் எல்லாம் இல்லை. படப்பிடிப்பு போன மாதமே முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.
 
ஆகஸ்டில் வெளியிட திட்டமிட்ட படமல்லவா?
 
எதிர்பாராத தாமதம் எல்லா படங்களுக்கும் ஏற்படும். 10 எண்றதுக்குள்ள படப்பிடிப்பு முடியும் முன்பே என்னுடைய பகுதிக்கான டப்பிங் முடிந்துவிட்டது. அதனால் வேலைகள் தாமதமானதாக சொல்ல மாட்டேன்.
 
உங்கள் படங்களை நீங்கள் பார்ப்பதில்லை என்று ஒரு தகவல் உலவுகிறதே?
 
அது சரிதான். இயக்குனர் விருப்பப்படி திருப்தி ஏற்படும் வரை நடிப்பேன். ஆனால், நான் நடித்த படங்களை நான் பார்க்க மாட்டேன். அதில் எனக்கு விருப்பம் இல்லை. என் நடிப்பை யாராவது குறை சொல்லிவிடுவார்களோ என்ற பயம்தான் இதற்கு காரணம்.
 
10 எண்றதுக்குள்ள படத்தில் நடித்த அனுபவம் எப்படியிருந்தது?
 
இதில் எனக்கு வித்தியாசமான வேடம். விக்ரமுடன்..
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க..

முதல்முறையாக நடித்திருக்கிறேன். இது எனக்கு புதிய அனுபவம்.


 

 
இந்தப் படத்தையாவது பார்ப்பீர்களா?
 
இந்த படத்தில் என் நடிப்பு எப்படி இருக்கிறது என்பதை அறிய படத்தை பார்க்கலாம் என்று இருக்கிறேன்.
 
தோல்வியிலிருந்து மீண்டவர் நீங்கள். வெற்றி தோல்வி பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?
 
தமிழில் நான் முதலில் நடித்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை. ஆனால் ‘விண்ணை தாண்டி வருவாயா’ தெலுங்கு ரீமேக்கில் நான் நடித்தேன். அது மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
 
ஒரு படம் தோல்வி அடைந்து விட்டது என்று சோர்ந்து போனால் கவலைதான் மிஞ்சும். எத்தனையோ வெற்றி தோல்வியை பார்த்துள்ளேன். எதை பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து நடித்து வருவதால்தான் அடுத்த படங்களில் வெற்றி பெற முடிகிறது. 
 
வெற்றியை எப்படி தக்க வைத்துக் கொள்கிறீர்கள்?
 
தற்போது ஓய்வு இல்லாமல் நடித்து வருகிறேன். இடைவெளி விழுந்தால் தோல்விகளை நினைத்து அழுது கொண்டுதான் இருக்கவேண்டும். அப்படி ஒரு நிலை வராமல் தமிழ், தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்புகள் வருகின்றன. இதில் கதைக்கு ஏற்ப சிந்தித்து நடித்து வருகிறேன். மேலும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.