வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 23 பிப்ரவரி 2015 (11:31 IST)

எனக்கு சினிமான்னு ஒண்ணு தெரியும்ங்கிறதே ரஜினி சாரைப் பார்த்துதான் - சிவ கார்த்திகேயன் பேட்டி

காக்கி சட்டை பிரஸ்மீட். அனைவரும் எதிர்பார்த்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் ஆப்சென்ட். பேச வந்தால் முதல் கேள்வி எதுவாக இருக்கும் என்று அறியாமலிருக்க சிவ கார்த்திகேயன் குழந்தையோ, பத்திரிகை படிக்காதவரோ கிடையாதே. நீங்க என்ன கேட்பீங்கன்னு தெரியும் என்று யாரும் கேட்கும் முன்பே தனுஷ் வராதது குறித்து பேச ஆரம்பித்தார். இனி சிவ கார்த்திகேயன்...
 
தனுஷ் சாருக்கும் எனக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர் ஏன் இங்க வரலைன்னு கேட்கலாம். இந்தப் படத்தோட கதை கேட்கலையான்னு கேட்டப்போ, இல்லை, இந்தப் படம் நல்லாதான் வரும். இந்த டீம் மேல நம்பிக்கை இருக்கு, ஏற்கனவே எதிர்நீச்சல் பண்ணிட்டேன் அப்படீன்னார்.
 
பாடல்கள் வெளியீட்டிலும் அவர் ஆப்சென்ட்...?
 
ஆடியோ லான்ச் அப்போ கேட்ட போது, இது உங்க படம், நீங்க பார்த்துப்பீங்க. நீங்க எல்லோருமே அந்த ஸ்டேஜ்ல இருக்கீங்க அப்படீன்னு நம்பி சொன்னார். இப்ப இல்லை, ஆரம்பத்திலிருந்தே அந்த நம்பிக்கையிலதான் இந்தப் படம் பண்ணப்பட்டிருக்கு. 
 
நம்பிக்கைன்னா என்ன மாதிரி? விளக்கமா சொல்ல முடியுமா?
 
தனுஷ் சார் எங்க எல்லார்மேலயும் வச்ச நம்பிக்கையிலதான் இந்தப் படம் பண்ணப்பட்டிருக்கு. இந்தப் படத்துக்கு பட்ஜெட்னு எதுவும் அவர் பிக்ஸ் பண்ணலை. உங்களுக்கு என்ன வேணுமோ அதை எடுத்திட்டு வந்திருங்கன்னு சொல்லிட்டார்.
 
ட்ரெய்லருக்கு என்ன மாதிரி ரெஸ்பான்ஸ் இருந்தது?
 
ட்ரெய்லர் பார்த்திட்டு எல்லோரும் சொன்னதுன்னா, நல்லாயிருக்கு உங்க லுக். கான்பிடென்டா இருக்கு. லுக் ஷார்ப்பா இருக்கு. யூனிபார்ம்ல பார்க்கும் போது போலீஸ் மாதிரி இருக்கீங்க அப்படீன்னு எல்லோருமே சொன்னாங்க. பர்ஸ்ட் அந்த மோஷன் போஸ்டர் வந்ததிலிருந்தே நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. 

ட்ரெய்லருக்கு ரிலீஸுக்கு முன்னாடி உங்களுக்கு கான்பிடென்ட் இருந்ததா?
 
கொஞ்சம் டென்ஷன்லதான் இருந்தேன். மத்தவங்ககிட்டயிருந்து நல்ல ரெஸ்பான்ஸ் வந்த பிறகுதான் நிம்மதியா இருந்தது. 
அனிருத் பற்றி சொல்லுங்கள்...?
 
இன்டஸ்ட்ரியில எனக்கு நிறைய ப்ரெண்ட்ஸ் கிடையாது. காரணம் எல்லாம் தெரியலை. மே பி நான் ரொம்ப ரிசர்வ்டா இருக்கேனோ என்னவோ. பட், அதையெல்லாம் தாண்டி அனிருத் ரொம்ப க்ளோஸ். ப்ரெண்ட், பிரதர் என்ன வேணும்னாலும் சொல்லலாம். அவர் எப்போதுமே என்னை ஒரு நல்ல லெவல்ல வச்சுதான் பார்ப்பார். இந்தப் பாட்டு நல்லாயிருக்கே, அதை அவன் ஆடிருவானா அப்படீன்னு இல்லாம, நல்லா பண்ண முடியும், நீங்க போய் பண்ணுங்க அப்படீன்னு என்கரேஜ் பண்ணுவார்.
 
அப்படி என்கரேஜ் பண்ணுன ஏதாவது ஒரு விஷயம்...?
 
இந்தப் படத்தின், இது காக்கி சட்டை அப்படீங்கிற இன்ட்ரோ சாங். அந்த மாதிரி சாங்குக்கு என்னை எல்லாம் யோசிக்க முடியாது. பட், அதை அவர் தைரியமாக கொடுத்தார். 
 
ட்ரெய்லரில் பார்க்கும் போது நீங்க ரஜினியை இமிடேட் செய்திருப்பது நல்லா தெரியுதே?
 
எனக்கு சினிமான்னு ஒண்ணு தெரியும்ங்கிறதே ரஜினி சாரைப் பார்த்துதான். பேஸிக்கலி நான் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட். அதனால சில இடங்கள்ல அந்த சாயல் இருக்கலாம். பர்ட்டிக்குலரா இப்படிதான் பண்ணுவேன்னு எதுவும் பண்ணலை. எங்கயாவது அந்த சாயல் இருக்கலாம். அது உள்ளுக்குள்ள ஆத்மார்த்தமா பிலீவ் பண்ணுனதோட பிரதிபலிப்பாதான் இருக்கும். எல்லா ரஜினி சார் வெறியர்களுக்கும் அந்த இம்பாக்ட் இருக்கும்.