சைத்தான் எனக்கு மைல் கல்லாக அமையும் - நடிகை அருந்ததி நாயர் பேட்டி

Sasikala| Last Updated: சனி, 26 நவம்பர் 2016 (14:12 IST)
சைத்தான் படத்தில் நாயகியாக அருந்ததி நாயர் நடித்துள்ளார். டிசம்பர் 1 இப்படம் வெளியாகிறது. சின்னச் சின்ன படங்களில் நடித்துக் கொண்டிருந்த அருந்ததி நாயருக்கு சைத்தான் மிகப்பெரிய வாய்ப்பு. அதுபற்றி அவர் அளித்த பேட்டி.

 
உங்கள் திரைவாழ்க்கை பற்றி சொல்லுங்க...?
 
நான் பொங்கி எழு மனோகரா படத்தில் நடித்திருக்கிறேன். நான் நடித்துள்ள விருமாண்டியும் சிவனாண்டியும் படம் நவம்பர் 25 வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. சைத்தான் டிசம்பர் 1 வெளியாகிறது.
 
சைத்தான் படம் பற்றி சொல்லுங்க...?
 
சைத்தான் என்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய மைல் கல்லாக அமையும். சைத்தான் என்னைப் பொறுத்தவரை தேவதை.
 
சைத்தானில் உங்கள் கதாபாத்திரம்?
 
ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். என்னுடைய திறமைகளை வெளிப்படுத்துகிற கதாபாத்திரமாக இந்த வேடம் அமைந்துள்ளது. இதனை நான் பெருமையாகச் சொல்வேன்.
 
55 வயது தோற்றத்திலும் நீங்கள் நடித்திருப்பதாக கூறப்படுவது...?
 
என்னுடைய வேடம் குறித்து இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது. ஆனால், உங்களுக்கு சர்ப்ரைசாக அது இருக்கும்.
 
இந்தப் படத்தின் ஸ்பெஷல் என்ன?
 
வளர்ந்து வரும் பிற மொழி பேசும் கதாநாயகிகளுக்கு சொந்த குரலில் டப்பிங் செய்வதற்கு பெரும்பாலும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால் விஜய் ஆண்டனி சார் என்னை எனது சொந்த குரலிலேயே சைத்தான் படத்தில் பேச வைத்திருக்கிறார். இது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது.
 
சைத்தான் பற்றி ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
 
வருகிற டிசம்பர் 1-ந் தேதி முதல் இந்த சைத்தானின் உண்மையான அவதாரத்தை ரசிகர்கள் தெரிந்து கொள்வீர்கள்.

 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :