வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (17:04 IST)

சொந்தமாக டப்பிங் பேசியிருக்கேன் - ஸ்ரீதிவ்யா பேட்டி

சொந்தமாக டப்பிங் பேசியிருக்கேன் - ஸ்ரீதிவ்யா பேட்டி

ஸ்ரீதிவ்யா நடித்துள்ள பெங்களூர் நாட்கள் இன்று வெளியாகியுள்ளது. மலையாளத்தில் நஸ்ரியா நடித்த வேடத்தை நம்பி ஸ்ரீதிவ்யாவிடம் ஒப்படைத்தார் இயக்குனர் பாஸ்கர். அதற்கு நியாயம் செய்திருப்பதான நம்பிக்கை ஸ்ரீதிவ்யாவிடம் உள்ளது.


 
 
பெங்களூர் நாட்களில் உங்கள் வேடத்தைப் பற்றி சொல்லுங்க...?
 
ரொம்பவும் சேலஞ்சிங்கான வேடம். நான் இதுவரை ரீமேக் படத்தில் நடித்ததில்லை. அதனால் சின்ன தயக்கம் இருந்தது. இயக்குனர் பாஸ்கர்தான் என்னை கன்வின்ஸ் செய்து நடிக்க வைத்தார். புதிய அனுபவம், நிறைய ஹோம் வொர்க் செய்து அந்த வேடத்தில் நடித்தேன்.
 
நிறைய நட்சத்திரங்கள் கொண்ட படம், அந்த அனுபவம் எப்படியிருந்தது?
 
என்னுடன் நடித்தவர்கள் எல்லோருமே நிறைய பேசக்கூடியவர்கள். அவர்களுடன் எப்படி பொருந்தப் போகிறேன் என்ற தயக்கம் இருந்தது. ஏன்னா, நான் அமைதியான ஆள், அதிகம் பேசுவதில்லை. ஆனால், முதல் நாளைக்கு அப்புறம் ரொம்பவும் கம்பர்டபிளாக ஃபீல் பண்ணுனேன். பாபி சிம்ஹா என்னிடம் தெலுங்கில் பேசுவார். நான் முழுமையாக படப்பிடிப்பை என்ஜாய் செய்தேன்.
 
உங்கள் கதாபாத்திரத்தை எப்படி உள்வாங்கி நடித்தீர்கள்?
 
நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணமாகி, என் கணவருக்கு ஒரு காதலி இருந்திருக்கிறாள் என்ற உண்மை தெரியவரும் போது நான் எப்படி ஃபீல் பண்ணுவேனோ, அதையே மனதில் வைத்து நடித்தேன். ராணாவும் அந்த மாதிரிதான் நடித்திருப்பார் என நினைக்கிறேன்.
 
இந்தப் படத்தில் சொந்தக்குரலில் டப்பிங் பேசியிருக்கிறீர்களாமே?
 
காக்கி சட்டை படத்திலேயே நான் சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்க வேண்டியது. தெலுங்கு கலந்த என்னுடைய தமிழ் அந்த கதாபாத்திரத்துக்கு செட்டாகாது என்று இயக்குனர் ஃபீல் பண்ணியதால் அதில் டப்பிங் பேசவில்லை. இந்தப் படத்தில் உதவி இயக்குனர்கள் டப்பிங் பேச எனக்கு உதவினார்கள். வசனங்களை மனப்பாடம் செய்து தமிழில் பேசி நடித்தேன். 
 
படம் எப்படி வந்திருக்கிறது?
 
இதுவொரு எமோஷனல் ஃபீல்குட் ஃபிலிம். ஒரிஜினல் படத்துக்கு நியாயம் செய்யும் வகையில் இருக்கும். புதிய ஸ்டைலில் அமைந்த கம்ப்ளீட் என்டர்டெய்னர்.