வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Ashok
Last Updated : சனி, 21 நவம்பர் 2015 (10:55 IST)

என்னை யாரும் தமிழனாகப் பார்ப்பதில்லை - கமல் பேட்டி

தூங்கா வனத்தின் தெலுங்குப் பதிப்பான சீக்கட்டி ராஜ்ஜியம் இன்று வெளியாகியுள்ளது. அதனை முன்னிட்டு ஹைதராபாத்தில் கமல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.


 
 
தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மையுடன் இருக்கிறீர்கள். ரசிகர்கள் இதில் யாரை விரும்புகிறார்கள்?
 
நான் சினிமாக்காரன். என்னை நடிகராக, டைரக்டராக, தயாரிப்பாளராக, நடன இயக்குனராக எந்த கோணத்தில் ரசிகர்கள் பார்த்தாலும் எனக்கு சந்தோஷம்தான்.
 
சினிமாவுக்கு வந்த போது உங்கள் லட்சியம் என்னவாக இருந்தது?
 
டைரக்டர் ஆக வேண்டும் என்று தான் சினிமாவுக்கு வந்தேன்.
 
இயக்குனர் ஆசையில் சினிமாவுக்கு வந்த நீங்கள் நடிகனானது எப்படி?
 
என்னுடைய ஆசையை பாலசந்தரிடம் கூறினேன். அதற்கு அவர் சினிமாவில் எப்போது வேண்டுமானாலும் டைரக்டர் ஆகலாம். ஆனால் உன்னுள் ஒரு நடிகன் தெரிகிறான் என்று என்னை உற்சாகப்படுத்தினார். அவரது விரலை பிடித்துக் கொண்டு இதுவரை வந்து விட்டேன்.
 
இத்தனை ஆண்டுகாலமாக சினிமாவில் இருக்கிறீர்கள். எப்போதாவது போரடித்திருக்கிறதா?
 
காலையில் எழுந்தவுடனேயே நான் சினிமா பற்றித்தான் யோசிப்பேன். எனது இந்த நீண்ட பயணம் எனக்கு போராடிக்கவில்லை.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்....

அரசியல் மற்றும் கடவுள் நம்பிக்கை...?
 
எனக்கு அரசியல் தெரியாது. கடவுள் நம்பிக்கையும், மத நம்பிக்கையும் இல்லை. ஆனால் கடவுளை நம்புபவர்களை நான் கவரவிப்பேன். அவர்களின் நம்பிக்கைக்கு நான் மதிப்பளிப்பேன்.

 
சினிமாவில் உங்கள் சம்பாத்தியம் என்னவென்று நினைக்கிறீர்கள்?
 
நான் இதுவரை சினிமாவில் எவ்வளவு ரூபாய் சம்பாதித்து இருக்கிறேன் என்று கணக்கு பார்க்கவில்லை. ரசிகர்களின் கைதட்டலுக்கு விலை நிர்ணயிக்க முடியாது.
 
பலமொழிப் படங்களில் நடிக்கிறீர்கள். அனைத்து இடங்களிலும் வரவேற்பு கிடைப்பது எப்படி?
 
நான் எந்தமொழி படத்தில் நடித்தாலும் என்னை தமிழன் என்று யாரும் பார்க்கவில்லை. என்னை ஒரு நடிகராகத்தான் பார்க்கிறார்கள். தெலுங்கு, இந்தி என எந்தமொழி படங்களில் நடித்தாலும் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு நான் ஒரு நடிகராகத்தான் தெரிகிறேன். நான் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தெலுங்குகாரன் என்று கவுதமி என்னை நினைத்துள்ளார். ஆனால் நான் தமிழன் என்று தெரிந்ததும் கவுதமி ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தார்.
 
உலக நாயகன் பட்டம்...?
 
ரசிகர்கள் கொடுத்துள்ள உலக நாயகன் பட்டத்துக்கு நான் பொருத்தமானவன்தானா என்று அடிக்கடி என்னையே நான் கேட்டுக் கொள்வேன். தெருவில் விளையாடும் ஒரு குழந்தையை அதன் தாய் மகாராஜா என்று அழைப்பது வழக்கம். அதற்கு அந்த குழந்தை நான் மகாராஜா என்று எண்ணி கர்வம் கொள்ளக்கூடாது. அதுபோல் தான் உலக நாயகன் பட்டத்தை நினைத்து நான் கர்வம் கொள்வதில்லை.