வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 27 ஜூலை 2015 (11:51 IST)

ஜெயம் ரவியின் வேடம் போலீசாகவும் போராளியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது - மோகன் ராஜா பேட்டி

மோகன் ராஜா. இதுவரை கேள்விப்படாத பெயராக இருக்கிறது என்று நெற்றி சுருக்க வேண்டாம். ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜாவின் புதிய பெயர்தான், மோகன் ராஜா. தனி ஒருவன் படத்தை இயக்கியிருக்கும் அவர், படம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
அது என்ன மோகன் ராஜா?
 
என்னுடைய பெயர் ராஜா. முதல் படம் ஜெயம் வெற்றி பெற்றதால் ரசிகர்கள் என்னுடைய பெயருடன் ஜெயத்தை சேர்த்துக் கொண்டார்கள். ஆனால், நான் இதுவரை அப்படி குறிப்பிட்டதில்லை. என்னுடைய வெற்றிகளுக்கெல்லாம் காரணமான என்னுடைய அப்பாவின் பெயரை இணைத்து, தனி ஒருவன் படம் முதல் மோகன் ராஜாவாக பெயரை மாற்றியிருக்கிறேன்.
 
தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவிக்கு என்ன மாதிரியான வேடம்?
 
ஜெயம் ரவி இதில் முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். போலீசாகவும், போராளியாகவும் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
நயன்தாரா...?
 
என்னுடைய படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும். இந்தப் படத்தில் நயன்தாரா தடவியல் நிபுணராக வருகிறார். ஒருகட்டத்தில் ஜெயம் ரவியையே வழிந்த்தும் அளவுக்கு அவரது கதாபாத்திரம் முக்கியமானது. 

தனி ஒருவன் என்ன மாதிரியான படம்? 
 
சமூக கருத்துள்ள படம். இதில் முக்கியமான சமூக கருத்து சொல்லப்பட்டிருக்கிறது.
 
படம் தாமதம் ஏன்?
 
இந்தப் படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி நடித்திருக்கிறார். ஜெயம் ரவி, நயன்தாரா என மூவருமே பிஸியான ஆள்கள். அவர்களின் கால்ஷீட் கிடைத்து படத்தை முடிக்க தாமதமாகிவிட்டது. 
இந்தியில் ரமணா படத்தை ரிமேக் செய்வதாகச் சொன்னது ஏன் நடக்கவில்லை?
 
வேலாயுதம் படம் முடிந்ததும் தமிழில் வெற்றி பெற்ற ரமணாவை இந்தியில் ரிமேக் செய்ய ஒப்பந்தமானேன். அந்தப் படத்தை என்னுடைய பாணியில் எடுக்க நினைத்தேன். சில சிக்கல்களால் அந்த ரிமேக்கை செய்ய முடியாமல் போனது.
 
படத்தில் எத்தனை பாடல்கள்?
 
மொத்தம் 5 பாடல்கள். அதில் 3 மான்டேஜ் பாடல்கள். ஆதி இசையமைத்து வரிகளும் போட்டுள்ளார்.
 
தனி ஒருவன் எப்போது ரிலீஸ்?
 
ஆகஸ்டில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறோம்.