செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (18:55 IST)

தனி ஒருவன் என்ன மாதிரி படம்? - ஜெயம் ரவி, மோகன் ராஜா பேட்டி

மோகன் ராஜா இதுவரை இயக்கிய படங்களில் தனி ஒருவன் படத்துக்குதான் அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். படத்தின் கதையும், கான்செப்டும் அப்படி.

படம் குறித்து ராஜாவும், அண்ணன் ராஜா குறித்து ஜெயம் ரவியும் கலகலப்பாக அளித்த பேட்டி உங்களுக்காக.
 
ஜெயம் ரவி:
 

 
உங்கள் அண்ணன் பற்றி சொல்லுங்க...?
 
ராஜா எப்படின்னா, ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதாவது ஊசிதான் குத்துவார். ஆனா, வலிக்கவே வலிக்காது. ஒவ்வொரு விஷயத்தையும் அந்த மாதிரி நமக்குள்ள ஏத்துவார். ஒரு சீன்னா அந்த சீன் மட்டுமே கிடையாது. ஸ்கிரிப்ட்ல அந்த சீனுக்கு முன்னாடி பின்னாடி உள்ளதெல்லாம் ஒரு சீன்ல பிரதிபலிக்கும். அதையெல்லாம் வச்சுதான் நம்மகிட்ட வேலை வாங்குவார். அவருக்கு நான் நன்றி சொல்ல மாட்டேன். இந்த மாதிரி ஒரு நல்ல படம் எடுக்கிறது அவரோட கடமை.
 
விஜய்யை வைத்து படம் செய்துவிட்டு அடுத்தப் படத்தை உங்களை வச்சு பண்ணியிருக்கார். எப்படி ஃபீல் பண்றீங்க?
 
விஜய் அண்ணா மாதிரி ஒரு பெரிய ஹீரோவுக்கு படம் பண்ணிட்டு, மறுபடி தம்பிக்குதான் பண்ணுவேன்னு சொன்னது ரொம்பவே பெரிய விஷயம். அது எனக்குக் கிடைச்ச ஆசிர்வாதமா நினைக்கிறேன். 
 
படப்பிடிப்பில் அண்ணன் எப்படி?
 
ஒரு நல்ல சைக்கோ எங்க அண்ணன். ரெண்டு வருஷமா எங்க எல்லோரையும் போட்டு அவ்வ்வவ்வளவு சந்தோஷப்படுத்தியிருக்கிறாரு (சிரிக்கிறார்). ஆனா, அதுக்கு பலனா படத்தைப் பார்க்கும் போது உண்மையிலேயே புல்லரிக்குது. என்னோட கரியர்ல ரொம்ப ரொம்ப முக்கியமான படமா தனி ஒருவன் இருக்கும். 

மோகன் ராஜா:
 

 
முதல்முறையா ஹிப்ஹாப் தமிழா ஆதியை பயன்படுத்தியிருக்கீங்க?
 
ஒரு டஃபான மெசேஜ், இன்ட்ரஸ்டிங்கான ஸ்கிரீன்ப்ளே. சரியா சொன்னா ஒரு பெரிய கான்வாஸ். அதை சரியா கொண்டு சேர்க்கிறதுக்கான வெகிக்கிளா ஹிப்ஹாப் ஆதி எனக்கு கிடைச்சார். சாங்ஸுக்கு கிடைச்ச சக்சஸை இந்தப் படத்துக்கு கிடைச்ச சக்சஸாதான் நினைக்கிறேன். 
 
தம்பியிடன் இன்னொரு படம். என்ன நினைக்கிறீங்க?
 
தம்பி காம்பினேஷன்ல எனக்கு இது சிக்ஸ்த் ஃபிலிம். எல்லா படங்களையுமே ஆடியன்ஸோட ஆசிர்வாதத்துல நல்லா பண்ணியிருந்தோம். இந்தவாட்டி, ஆறாவது படமா பண்ணும்போது ரெஸ்பான்சிபிள் அதிகமிருந்தது. சேலஞ்சிங்கா பண்ணுனோம். எனக்கு இது லைஃப்ல செகண்ட் இன்னிங்ஸ் மாதிரி. பர்ஸ்ட் ஃபிலிம் பண்ற மாதிரி ஃபேஷனோட பண்ணியிருக்கேன். 
 
தனி ஒருவன் என்ன மாதிரியான படம்?
 
சோஷியல் பொலிடிக்கல் கதையை த்ரில்லர் மூடுல கொண்டு வரணும்னு ஆசைப்பட்டேன். எல்லா படமுமே ஹீரோ வில்லன் கெமிஸ்ட்ரிதான். இதுல அதைத்தாண்டி என்ன பண்ண முடியும், என்ன கெமிஸ்ட்ரியை கொண்டு வரலாம்னு ரொம்ப யோசிச்சு நிறைய நாள்கள் எடுத்து பண்ணியிருக்கேன். 
 
என்ன கதை?
 
இந்த சமூகத்துல ஒரு ஹீரோவோட ரியல் வார் இன்னைக்கு எது? சும்மா சினிமாட்டிக்கா இல்லாம உண்மையாகவே என்ன பண்ணணும்? இந்த சமூகத்துல உள்ள ஒவ்வொருக்கும் ரியல் வில்லன் யார் அப்படீங்கிறதுதான் இந்தப் படத்தோட மெயின் கதையே.
 
அரவிந்த்சாமி நடித்திருக்கிறாரே?
 
ராஜா படம்னா சென்சிபிளாக இருக்கும். நல்ல ஒரு பார்ட் நமக்கு இருக்கும்னு இந்தப் படத்துல நடிச்ச அரவிந்த்சாமி சார் முதற்கொண்டு எல்லோருக்கும் நன்றி.