1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 29 ஜனவரி 2016 (11:51 IST)

பேயாக நடிப்பது ரொம்ப கஷ்டம் - த்ரிஷா பேட்டி

13 வருடங்களாக சினிமாவில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. ரசிகர்களுக்கு அவரை இப்போதும் திரையில் பார்க்க சலிக்கவில்லை. இன்று அவர் நடித்துள்ள அரண்மனை 2 படம் வெளியாகியுள்ளது. த்ரிஷா முதல்முறையாக நடித்துள்ள பேய் படம் இது.
 

 
அரண்மனை 2 படத்தை ஒப்புக்கொள்ள என்ன காரணம்?
 
இதில் என்னுடைய ரோல் வித்தியாசமாக இருந்தது. இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களிலிருந்து இந்த வேடம் முற்றிலும் மாறுபட்டது. அதனால்தான் இந்தப் படத்தை விரும்பி ஒப்புக் கொண்டேன். என்னுடைய ரோல் சேலஞ்சிங்காக இருந்தது.
 
பேயாக நடித்தது எப்படி இருந்தது?
 
பேயாக நடிப்பது எளிது கிடையாது. அதற்கு ஸ்பெஷலான மேக்கப் போட வேண்டும். படப்பிடிப்பின் போது கண்களை இமைக்கக்கூட முடியாது. உண்மையிலேயே பேயாக நடித்தது கஷ்டமாக இருந்தது.
 
பேயாக என்னவெல்லாம் படத்தில் செய்திருக்கிறீர்கள்?
 
சுவரில் என்னுடைய தலையை மேதுவதுபோல் காட்சி உள்ளது. சுவரில் தொங்குவது, பறப்பது என்று நிறைய செய்திருக்கிறேன்.
 
சித்தார்த்துடன் மீண்டும் இணைந்திருக்கிறீர்கள்..?
 
நான் சினிமாவில் நுழைந்த காலம் தொட்டே சித்தார்த்தை எனக்குத் தெரியும்.
 
சினிமா இன்டஸ்ட்ரியில் உள்ள என்னுடைய நெருக்கமான நண்பர். இதில் என்றுடைய ஜோடியாக வருகிறார். அவருடன் வேலை செய்வது எப்போதும் சுவாரஸியமானது. இந்தப் படத்தில் எங்களுடைய கெமிஸ்ட்ரி ஸ்பார்க்கிங்காக இருக்கும்.
 
ஹன்சிகா குறித்து...?
 
ஹன்சிகாவுடன் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. நாங்கள்  இரண்டு காட்சிகளிலும், ஒரு பாடல் காட்சியிலும்தான் இணைந்து நடித்திருக்கிறோம். பார்க்கிற போது எல்லாம் எங்களின் தனிப்பட்ட விஷயம் முதல் சினிமாவரை அனைத்தையும் பேசிக்கொள்வோம்.
 
பூனம் பஜ்வாவும் உடன் நடித்திருக்கிறாரே...?
 
பூனத்துடன் ஏற்கனவே சேர்ந்து நடித்திருக்கிறேன். சிறந்த நடிகை. நல்ல ஃப்ரெண்ட்.
 
பேய்களில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா...?
 
உண்டு.
 
திடீரென்று பேய் படத்தில் நடிக்க என்ன காரணம்?
 
தென்னிந்தியாவில் பேய் படங்கள் நான்றாகப் போகிறது. இந்தப் படங்களில் காதல், சென்டிமெண்ட், காமெடி என எல்லாமே இருக்கிறது. இந்தப் படத்திலும் காமெடி சிறப்பாக வந்திருக்கிறது. நாயகி என்று பேய் படத்திலும் தற்போது நடித்து வருகிறேன்.
 
இயக்குனர் சுந்தர் சி. பற்றி..?
 
எதற்கும் கவலைப்படாத ஒன் ஆஃப் த கூலஸ்ட் டைரக்டர். அவருடன் வேலை பார்ப்பது ஜாலியானது. நம்மை எப்போதும் கம்பர்ட்டபிளாக ஃபீல் பண்ண வைப்பார்.