1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2016 (16:09 IST)

ரீமேக் படத்தை ஒரிஜினலுடன் ஒப்பிடுவது தவறு - பார்வதி பேட்டி

ரீமேக் படத்தை ஒரிஜினலுடன் ஒப்பிடுவது தவறு - பார்வதி பேட்டி

பூ,மரியான், உத்தம வில்லன் படங்களில் தனது திறமையை வெளிப்படுத்திய பார்வதி, பெங்களூர் நாட்கள் படத்தில் பிரதான வேடங்களில் ஒன்றில் நடித்துள்ளார். 


 
 
அப்படம் குறித்து அவர் அளித்த பேட்டி.
 
பெங்களூர் நாட்கள் படத்தில் உங்கள் கதாபாத்திரம் என்ன?
 
மலையாளத்தில் பெங்களூர் டேய்ஸ் படத்தில் நான் நடித்த சாரா கதாபாத்திரத்தைதான் இதில் பண்ணியிருக்கிறேன். 
 
மலையாளப் படத்தை அப்படியே எடுத்திருக்கிறார்களா?
 
தமிழுக்காக சில காட்சிகளை மாற்றியும், அதேநேரம் மலையாளப் படத்தின் தன்மை விட்டுப் போகாமலும் பாஸ்கர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஒரு படத்தை ரீமேக் செய்யும்போது இயக்குனருக்கு அதற்கான சுதந்திரம் தர வேண்டும். ரீமேக்கை ஒரிஜினலுடன் ஒப்பிடுவது தவறு.
 
உங்கள் கதாபாத்திரத்தில் ஏதேனும் மாற்றம் உண்டா?
 
மலையாளப் படத்தில் சாராவின் தலைமுடி குட்டையாக பாப் கட்டிங்காக இருக்கும். இதில் கொஞ்சம் நீண்ட முடி வைத்திருக்கிறேன். காஸ்ட்யூமும் கொஞ்சம் மாறியிருக்கிறது. மற்றபடி கதாபாத்திரத்தின் தன்மை அதேதான்.
 
ஒரு நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளது. அந்த அனுபவம் எப்படியிருந்தது?
 
நான் என்னுடைய காட்சிகள் படமாக்கப்பட்டபோது மட்டுமே செட்டுக்கு வருவேன். அதனால் ஆர்யா தவிர மற்றவர்களுடன் அவ்வளவாக பழக முடியவில்லை.
 
மலையாளத்தில்...? 
 
என்னுடைய காட்சி இல்லாதபோதும் படப்பிடிப்புக்கு செல்வேன். அதனால் படப்பிடிப்பு தளமே வேறு மாதிரி இருக்கும். ஒரு குடும்பம் போலவே ஃபீல் செய்தேன்.
 
ஒரு படத்தை எப்படி ஒப்புக்கொள்கிறீர்கள்?
 
கதை, கதாபாத்திரம் முக்கியம். அதைவிட இயக்குனரின் ஆட்டிட்யூடும், பெர்சனாலிட்டியும் கொடுக்கும் கான்பிடென்ட்தான் ஒரு படத்தை தேர்வு செய்வதா இல்லையா என்பதை தீர்மானிக்க வைக்கும்;.
 
பாஸ்கருடன் பணிபுரிந்தது எப்படியிருந்தது?
 
பாஸ்கர் ஒரு புரபஷனல். பிரமாதமாக வேலை பார்க்க கூடியவர். வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் அவருடன் பணிபுரிய ஆவலாக இருக்கிறேன்.