Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கவலைகள் வரும்போது அழுவேன் - திரிஷா ஓபன் டாக்

Last Modified: திங்கள், 3 ஏப்ரல் 2017 (18:32 IST)

Widgets Magazine

நடிகை திரிஷா இப்போதுதான் அதிக படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அதற்கான காரணம் குறித்தும், தன்னை விமர்சிப்பவர்கள் குறித்தும் அவர் பேட்டியளித்தார்.


 

 
அதில், 
 
திடீரென்று அதிக படங்களில் நடிக்கிறீர்களே?
 
இந்த ஆண்டு 10 படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது இலக்காக இருக்கிறது. அதிக படங்களில் ஒரே நேரத்தில் மாறிமாறி நடிப்பது கஷ்டம்தான். ஆனாலும் பரவாயில்லை. ஓய்வில்லாமல் படங்களில் நடிப்பது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. நான் தற்போது நடித்து வரும் அனைத்து படங்களுமே நல்ல கதைகள். அதனால் அவற்றை விடுவதற்கு மனமில்லாமல் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
 
உங்களை குறி வைத்து விமர்சிக்கிறார்களே?
 
சிலர் அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்வார்கள். ஆனால் அதை அவர்கள் கடைபிடிக்கமாட்டார்கள். அப்படிபட்டவர்களை பார்க்கும்போது எனக்கு கோபம் வரும். என் மனம் என்ன சொல்கிறதோ அதன்படி நடக்கிறேன். கவலைகள் வரும்போது சிறிது நேரம் அழுவேன். அதன்பிறகு அவை மாயமாக மறைந்து விடும்.
 
தோல்விக்கு உங்களின் எதிர்வினை எப்படி இருக்கும்?
 
வயிறு நிறைய ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டு நன்றாக தூங்கி விடுவேன். தூங்கி எழுந்த பிறகு தோல்வி கொடுத்த மன அழுத்தத்தில் இருந்து மீண்டு விடுவேன்.
 
பயப்படுகிற விஷயம் ஏதாவது?
 
யாராவது தலையணையை வைத்து என் முகத்தை அழுத்தி மூச்சை நிறுத்தி விடுவார்களோ என்று பயமாக இருக்கும்.
 
இளம்பெண்களுக்கு உங்கள் அறிவுரை?
 
இளம்பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். உங்கள் கனவுகளை சாதிக்கிற வாழ்க்கையை எதிர்கொள்ள துணிச்சலாக அடியெடுத்து வையுங்கள்.
 
திருமணத்துக்குப்பின் பெண்கள் வேலைக்கு செல்வது நல்லதா?
 
இந்த காலத்து பெண்கள் வீட்டையும், வேலையையும் சிறப்பாக கவனித்துக்கொள்கிறார்கள். திறமையான நிர்வாகிகளாகவும் இருக்கிறார்கள்.
 
காதல், காதலர்...?
 
காதலர் பற்றி இப்போது எதுவும் பேச விரும்பவில்லை.
 
கடவுள் உங்கள் முன்னால் வந்தால் என்ன கேட்பீர்கள்?
 
எதுவும் கேட்கமாட்டேன். எனக்கு என்ன வேண்டும் என்று கடவுளுக்கு தெரியும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

விஜய் சேதுபதியின் பிரச்சனை பாபி சிம்ஹாவுக்கும்: அப்படி என்ன?

விஜய் சேதுபதிக்கும் பாபி சிம்ஹாவிற்கும் இருக்கும் பிரச்னை சூப்பர் ஸ்டார் ரஜினி போன்ற ...

news

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்: ரூ.3,400 கோடி நாசம்!!

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படங்களுக்காக பல கோடி ரூபாய் மதிப்புடைய கார்கள் விசேஷமாக ...

news

போலி கையெழுத்து: நடிகர் தனுஷ் வழக்கில் திடீர் திருப்பம்!

பிரபல திரைப்பட நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என மேலூரை சேர்ந்த தம்பதிகள் மேலூர் ...

news

விஜய் ஆண்டனி நடிப்பில் காளி படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்!

விஜய் ஆண்டனி எமன் படத்தை அடுத்து அண்ணாதுரை படத்தில் நடிக்க இருந்தார். இதனை இயக்குனர் ...

Widgets Magazine Widgets Magazine