1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 13 நவம்பர் 2015 (21:27 IST)

நான் திமிர் பிடித்தவள் அல்ல - நித்யா மேனன் பேட்டி

மணிரத்னத்தின், ஓ காதல் கண்மணியில் நடித்த நித்யா மேனன் அவரது அடுத்தப் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
 

 
தனக்குப் பிடித்தால் மட்டுமே நடிக்கும் குணம் உடையவர் என்பதால் நித்யா மேனனுக்கு இன்டஸ்ட்ரியில் கறார் பேர்வழி என்ற பெயர் உண்டு. தனது கொள்கையில் எப்போதும் தவறுவதில்லை என்ற முடிவு நித்யா மேனனின் பேச்சில் வெளிப்படுகிறது.
 
காதல் அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா?
 
இருக்கு. பதினெட்டாவது வயதில் ஒருத்தரை காதலித்தேன். ஒருகட்டத்தில் அவரோடு என் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது என்று மனதுக்கு பட்டது, உடனே அவரைவிட்டு விலகினேன்.
 
திருமணம் எப்போது...?
 
என்னுடைய வாழ்க்கை இப்போது இருப்பதைவிட மகிழ்ச்சியாக இருக்கும் என்று ஒருவரை சந்திக்கும் போது எனக்குத் தோன்றினால் அவரை திருமணம் செய்து கொள்வேன். அப்படிப்பட்டவரை இதுவரை நான் சந்திக்கவில்லை. 
 
இனிமேலும் சந்திக்கவில்லையென்றால்...?
 
பொருத்தமில்லாத ஒருவரை திருமணம் செய்து கஷ்டப்படுவதைவிட, திருமணம் செய்யாமலே இருந்துவிடலாம்.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

உங்களுடைய தோற்றம் எப்போதாவது உங்களுக்கு பின்னடைவாக இருந்தது உண்டா...?
 
நான் குண்டாகவும், குள்ளமாகவும் இருப்பதாகக் கூறுகிறார்கள். அதை வைத்து இப்படி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.


 

குண்டாக இருப்பது, குள்ளமாக இருப்பதெல்லாம் கடவுள் கொடுத்தது. அதை விமர்சிக்கக் கூடாது. ஒல்லியாக வேண்டும் என்பதற்காக சாப்பாட்டை தியாகம் செய்வதெல்லாம் பைத்தியக்காரத்தனம்.
 
உங்களை திமிர் பிடித்தவர் என்கிறார்களே?
 
நான் திமிர் பிடித்தவள் கிடையாது. கொஞ்சம் கடுமையாக இருப்பேன். நெருக்கமாக பழகாவிட்டால், மோசமான பெண் என்று முத்திரை குத்துகிறார்கள். படப்பிடிப்புக்கு நான் தனியாகத்தான் வருகிறேன். அம்மா, அப்பா, மேனேஜர் என்று யாரும் உடன் வருவது கிடையாது. என்னை நான்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். யாராவது எனக்குப் பிடிக்காததை செய்தால் திட்டுவேன். அதனை திமிர் என்கிறார்கள்.
 
சினிமாவால் நீங்கள் அடைந்ததும், இழந்ததும் என்ன?
 
சினிமாவில் நல்லது, கெட்டது இரண்டும் இருக்கிறது. நடிகைக்கு செலிபிரிட்டி என்ற அந்தஸ்து எனக்கு பிடிக்கவில்லை. அதனால் வெளியே போக முடிவதில்லை. கூட்டம் கூடிவிடுகிறது.
 
அதை தொந்தரவாக நினைக்கிறீர்களா?
 
கூட்டம் சேர்வதுடன் திருட்டுத்தனமாக புகைப்படமும் எடுக்கிறார்கள். நடிகை இல்லாத யாரையேனும் இப்படி புகைப்படம் எடுக்க முடியுமா? எடுத்தால் சும்மா விடுவார்களா?
 
ஆண்களை எட்டவே வைத்திருக்கிறீர்களே, ஆண்கள் என்றால் கெட்டவர்கள் என்ற எண்ணமா?
 
அப்படியில்லை. ஆண்கள் எல்லோரும் கெட்டவர்கள் இல்லை. நான் அப்படி நினைக்கவும் இல்லை.