வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Caston
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2015 (11:29 IST)

ஐ யாம் ஹேப்பி - நந்திதாவின் பேட்டி

அட்டகத்தியில் அறிமுகமான நந்திதாவுக்கு தமிழில் நல்ல இடம் கிடைத்துள்ளது. உப்பு கருவாடு படம் வெளியாகும் நிலையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.


 
 
உப்பு கருவாடு படத்தில் உங்கள் கதாபாத்திரம் பற்றி கூறுங்கள்...?
 
உப்பு கருவாடு படத்தில் குழந்தைத்தனமான பெண்ணாகவும், துணிச்சலான பெண்ணாகவும் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ராதா மோகன் இயக்கத்தில் நடிப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த படத்தின் கதாபாத்திரம் என்னுடைய பொறுப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.
 
தற்போதைய சூழல் உங்களுக்கு திருப்திகரமாக உள்ளதா?
 
எனக்கு ஏற்ற மாதிரி கதாபாத்திரங்கள் அமைகிறது. நல்ல கதையம்சம் உள்ள படங்களில் இயக்குனர்கள் என்னை தேர்வு செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. நான் ஹேப்பியாக இருக்கிறேன்.
 
உங்களின் உடனடி ஆசை என்ன?
 
படங்களில் டப்பிங் பேச ஆசைப்படுகிறேன். ஆனால், இதுவரை என்னை டப்பிங் பேச யாரும் அழைக்கவில்லை.
 
உங்களுக்குத்தான் தமிழ் சரியாகத் தெரியாதே. இதுவரை யாரும் எதுவும் சொல்லவில்லையா?
 
தமிழ் மொழி பேச மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். ஓரிரு வார்த்தைகள் எனக்கு பேச வராது. இதனால் அஞ்சல படப்பிடிப்பின் போது விமல் என்னை கலாய்த்தார்.
 
சமீபத்திய மகிழ்ச்சி...?
 
அஞ்சல படத்தில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் எனக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். இவர் ஒரு பேட்டியில், நான் நடிக்கும் படங்கள் எல்லாம் ஹிட்டாகிறது என்று கூறினார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது.
 
புலி படத்தில் நடித்த அனுபவம் எப்படி? ரொம்ப சின்ன வேடத்தில் அதில் நடித்திருந்தீர்கள்...?
 
புலி படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. சின்ன வேடத்தில்தான் நடித்திருந்தாலும் எனக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.
 
உப்பு கருவாடு குறித்து உங்க அபிப்ராயம் என்ன...?
 
உப்பு கருவாடு எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கும்.