1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 6 அக்டோபர் 2014 (12:16 IST)

நாலைஞ்சு சுமோ பறந்துதான் ஆக வேண்டியிருக்கு... என்ன பண்றது - ஹரி பேட்டி

பூஜை படத்தின் பிரஸ்மீட். வழக்கம் போல எதிர்காற்றில் சைக்கிளில் வந்த ஹேர் ஸ்டைலுடன் (நன்றி - விவேக்) வந்திருந்தார் ஹரி. படம் திட்டமிட்டதைவிட விரைவாக முடிந்த திருப்தி பிளஸ் மகிழ்ச்சியுடன் அவர் பகிர்ந்து கொண்டவை இங்கே உங்களுக்காக.
படம் முடிந்துவிட்டதா?
 
படம் வொர்க்கெல்லாம் முடிஞ்சிடுச்சி. ஒண்ணு ரெண்டு நாள்ல சென்சார் முடிச்சி புரொடியூசர் கையில கொடுத்தா ஃப்ரீயாயிடலாம். இந்தப் படத்தை கோயம்புத்துhர் பேக்ரவுண்டல எடுக்கிறதுன்னு முடிவு பண்ணுனேன். ஆக்சுவலா அருள் அங்கதான் பண்ணியிருந்தேன். ஆனா கோயம்புத்தூர்ல நிறைய வொர்க் பண்ண முடியலை. ஆனா இதுல அப்படியில்லை. நிறைய அங்க ஷுட் பண்ணிருக்கோம்.
 
முதல்முறையா குடும்பக் கதையை டைரக்ட் பண்ணியிருக்கிறதா சொல்கிறார்களே...?
 
படத்துல பேமிலியும் இருக்கு. மத்தபடி யூத்தான லவ் ட்ராக், ஆக்ஷன் எல்லாம் இருக்கு. விஷாலுக்கு பைட்டெல்லாம் யதார்த்தமா அமையணும்னு ஸ்கிரீன் ப்ளேயில் நிறைய மெனக்கெட்டிருக்கோம். இந்தப் படத்தை பேமிலியோட என்டர்டெய்ன்மெண்டா பார்க்கணுங்கிற அடிப்படையில் எடுத்திருக்கோம். 
 
பேமிலிக்குதான் முக்கியத்துவம் தந்திருக்கிறீர்களா?
 
வேல், தாமிரபரணி மாதிரி இதுவொரு பேமிலி கதைதான். அதேநேரம் இன்னைக்குள்ள யூத்துக்கு பிடிக்கிற மாதிரி பர்ஸ்ட் ஆஃப் முழுக்க ஒரு மாடர்னான லவ் ட்ராக் இருக்கு. மாடர்னான இடம்ங்கிற போது சென்னைக்கு அடுத்துப் பார்த்தா கோயம்புத்தூர். ரொம்ப மாடர்னா ட்ரெண்டியான சிட்டியா இருந்திச்சி. அதனாலதான் கோயமத்புத்தூரை பேக்ரவுண்டா வச்சிகிட்டோம். 
 
முதல்முறையா உங்க இயக்கத்தில் சத்யராஜ் நடிச்சிருக்கார்...?
 
சத்யராஜ் சாருக்கு நான் ரொம்ப நாளாகவே ரசிகன். அவர்கூட வொர்க் பண்ணணும்னு ரொம்ப நாள் ஆசை. அது இந்தப் படத்தில் நிறைவேறியிருக்கு. முடியில்லாத அந்த பழைய கெட்டப்பல பண்ணி கொடுத்திருக்காங்க. படத்துக்கே ரொம்ப முக்கியமான கேரக்டர். கடைசிவரைக்கும் இவர் என்னப் பண்ணப் போறார்னு தெரியாத மாதிரி ஒரு த்ரில்லிங் கேரக்டர். 
புரொடியூசர் விஷால்...?
 
விஷால் புரொடியூஸ் பண்ணலைன்னா இந்தப் படத்தை யாருமே பண்ணிருக்க முடியாது. ஏன்னா அந்தளவு செலவு பண்ணியிருக்கோம். நிறைய லொகேஷன்ஸ் போனோம். அதுக்கெல்லாம் எந்தக் கேள்வியும் கேட்கலை. அதேநேரம் என்ன செலவு செய்றோம்ங்கிறதுலயும் அவர் கரெக்டா இருந்தார். ஷுட்டிங் முடிந்த பிறகு கேரவன்ல உட்கார்ந்து என்னென்ன செலவுங்கிறதை கரெக்டா சரிபார்ப்பார். அந்த பொறுப்பு எல்லா புரொடியூசர்ஸுக்கும் வேணும்.

ஹீரோ விஷால்...?
 
விஷால்கூட தாமிரபரணி பண்ணிருக்கேன். அது நல்லா போச்சு. அவரோட வளர்ச்சியை தொடர்ந்து பார்த்துகிட்டிருக்கேன். எப்படா அவர்கூட சேரலாம்னு பார்த்துகிட்டிருந்தப்போ அவன் இவன்னு பெர்பாமென்ஸ் ஓரியண்ட் படம் பண்ணிட்டார். அப்போ நாம வெறும் கமர்ஷியல் மட்டும் பண்ணா போதாது. எவ்வளவு எமோஷன்ஸ் ஏத்தலாம்ங்கிறதை வச்சு ஸ்கிரின் ப்ளே பண்ணோம். 
 
எல்லமோ யதார்த்தமா பார்க்கிறவங்களுக்கு டிஸ்டர்ப் பண்ணாதவகையில வச்சிருக்கோம். ஆக்ஷன்ல மட்டும் வண்டி அப்படி இப்படி போகும் அதை கிண்டல் பண்ணாதீங்க. பத்து இருபது பேர் சேர்ந்து ஒருத்தனை துரத்துறப்போ நாலைஞ்சு சுமோ பின்னாடி பறந்துதான் ஆக வேண்டியிருக்கு. நான் என்ன பண்றது...?
 
அருவா...?   சண்டை இருந்தாலும் அருவா இதுல கம்மிதான். 

 
படத்தை சீக்கிரமே முடிச்சிருக்கீங்க. எப்படி...?
 
100 நாள் பிளான் பண்ணி தொண்ணுnறு நாள்ல படத்தை முடிச்சிருக்கோம். அதுக்கு ஆர்ட்டிஸ்டோட கோவாப்ரேஷன்தான் காரணம். அப்புறம் நான் பண்ணுன சின்னச் சின்ன டார்ச்சர்ஸ். 
 
பீகாரிலும் ஷுட் பண்ணியிருக்கீங்க...?
 
படம் கோயம்புத்தூல் ஆரம்பிச்சு பீகார்ல முடியுது. இதுக்காக போஜ்புரி ஆர்ட்டிஸ்டை நடிக்க வச்சிருக்கோம். முதல்முறையா ஒரு வில்லனை அறிமுகப்படுத்தியிருக்கோம். பீகார் போர்ஷன் வித்தியாசமாக இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். அங்க மந்திரியாக இருக்கிற ஒருத்தரையும் நடிக்க வச்சிருக்கோம். மூணு நாள்தான் ஷுட் பண்ணுனோம். ஆனா நிறைவா வந்திருக்கு.