1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : புதன், 15 ஏப்ரல் 2015 (08:40 IST)

ரைட்டா ராங்கா ஒப்பீனியன் சொல்ல இரண்டரை மணிநேர படம் எடுக்க மாட்டாங்க - மணிரத்னம்

மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி ஏப்ரல் 17 திரைக்கு வருகிறது. வழக்கம் போல் இல்லாமல், பத்திரிகையாளர்களை சந்தித்து வழக்கத்தைவிட அதிகம் பேசவும் செய்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவரது பதில்களும்.
 

 
இந்தப் படத்தோட கதை, லிவிங் டுகெதரைப் பற்றின்னு ஒரு தகவல் இருக்கே?
 
இன்னும் சில நாள் வெயிட் பண்ணுனிங்கன்னா தெரிஞ்சிடும்.
 
லிவிங் டுகெதர் சரியா தப்பா?
 
எதாவது ஒரு விஷயத்தில ரைட்டா ராங்கா ஒப்பீனியன் சொல்றதுன்னா இரண்டரை மணிநேர படம் எடுக்க மாட்டாங்க. நீங்க அனுபவிச்சு பார்த்து , அந்த கேரக்டர் செய்தது சரியா இல்லையா, சொஸைட்டி இதை எப்படி ரிப்ளெக்ட் பண்ணுதுங்கிறதுதான் படம். நீங்க பார்த்துட்டு நீங்க சொல்ல வேண்டியதுதான். 
 
உங்களை பேட்டி எடுக்கவோ, ஒரு விஷயத்தில் உங்க கருத்தை கேட்கவோ சுலபத்தில் முடிய மாட்டேங்குதே?
 
எதாவது விஷயம் இருந்திச்சின்னா அதைப் பற்றி பேசலாம். ஒரு படம் வந்தா அதைப் பற்றி டிஷ்கஸ் பண்ணலாம். ஜெனரலா நேத்தைக்கு நீங்க என்ன பண்ணுனீங்க, நான் என்ன பண்ணுனேன்னு பேச முடியுமா. 
 
பி.சி.ஸ்ரீராம் கூட 15 வருடத்துக்குப் பிறகு வொர்க் பண்ணியிருக்கீங்க?
 
அவர்கூட எப்போதுமே வொர்க் பண்ற மாதிரிதான் இருக்கு. எல்லா படமும் அவர்கிட்டதான் நான் முதல்ல சொல்வேன். அதனால எங்களுக்கு ரொம்ப நாள் கழிச்சு பண்ற மாதிரியே இல்லை. 
 
துல்கர் சல்மான்...?
 
ரொம்ப பிரமாதமாக நடிச்சிருக்கார். ரொம்ப பிராமிஸிங். வெரிகுட் ஆக்டர்.
 
நித்யா மேனன்...?
 
ஷி இஸ் வெரிகுட். எக்ஸலென்ட். இந்தப் படத்துல இவங்க ரெண்டு பேர்தான் பிரதானமாக வர்றாங்க. லைவ் சவுண்ட்ல படத்தை எடுத்திருகங்கோம். சோ, ஸ்பாட்லயே கரெக்டா பண்ணணும். ரெண்டு பேருமே நல்லா பண்ணுனதால என்னோட வேலை ஈஸியாயிடுச்சி.
 
பாடல்கள் அதிகமிருக்கே?
 
பாடல்கள் அதிகமிருந்தாலும் கதாபாத்திரங்கள் வாயை அசைத்து பாடும் பாடல்கள் இரண்டுதான். மற்றவை படத்தின் பின்னணியோடு இணைஞ்சு வரும். வைரமுத்து, ரஹ்மான் இருண்டு பேரோட உழைப்பும் இதில் அதிகம்.